வீட்டு பொருட்களை வித்து அவருக்கு காசு கொடுத்துடுங்க – வறுமை காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட ஊர்வசியின் உறவினர்கள் எழுதி வைத்த கடிதம்.

0
546
urvashi
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சனி. திரை உலகிற்காக ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார். இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தான் ஊர்வசி தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி நகைச்சுவையும் செய்யலாம் என்பதை நிரூபித்தார்.

-விளம்பரம்-

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே நடிகை ஊர்வசி அவர்கள் முதலில் மலையாள நடிகர் மனோஜ் என்பவரை 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பின் நடிகர் மனோஜ்–ஊர்வசிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். பின்னர் நடிகர் மனோஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின் ஊர்வசியும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

- Advertisement -

ஊர்வசி குடும்பத்தில் துக்க சம்பவம்:

இருந்தாலும் ஊர்வசி தன்னுடைய கேரியரை விடாமல் தொடர்ந்து நடித்து கொண்டு வருகிறார். தற்போது படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். இந்நிலையில் நடிகை ஊர்வசியின் குடும்பத்தில் துயர சம்பவம் நடந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை ஊர்வசிக்கு கமல் என்ற தம்பி இருக்கிறார். இவர் பிரமிளா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரிந்து விட்டார்கள். பிரிவிற்கு பின் பிரமிளா தன்னுடைய தம்பி சுசீந்திரன் உடன் தான் வாழ்ந்து வந்தார்.

வறுமையில் வாடிய பிரமிளா:

சுசீந்திரன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கமலுடன் பிரிவிற்கு பின்பு பிரமிளாவிற்கு உதவ யாருமில்லை என்பதால் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து வந்தார். அதோடு ஊர்வசியின் அக்கா நடிகை கல்பனா தான் பிரமிளாவுக்கு உதவி கொண்டு வந்தார். ஷூட்டிங்கில் தனது கிடைக்கும் பணத்தில் கொஞ்சம் பிரமிளாவிற்கு கல்பனா கொடுத்து வந்தார். பின் 2016ஆம் ஆண்டு கல்பனா இறந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் தோழா படத்தின் சூட்டிலேயே உடல்நிலை குறைவால் இறந்தார். மேலும் கல்பனாவின் இறப்பிற்குப் பின் பிரமிளாவை பார்த்துக் கொள்வதற்கு யாரும் இல்லை.

-விளம்பரம்-

பிரமிளா- சுசீந்திரன் தற்கொலை:

ரொம்ப வறுமையின் கொடுமையில் தான் பிரமிளா வாழ்ந்து இருந்தார். வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல் பிரமிளா கஷ்டத்தில் இருந்ததார். இதனால் வறுமை கொடுமை தாங்க முடியாமல் பிரமிளா தன் தம்பியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் இறந்தது கூட வெளிய யாருக்கும் தெரியவில்லை. பின் துர்நாற்றம் வீசிய பிறகு தான் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தனி தனி அறைகளில் சுசீந்திரனும் பிரமிளாவும் தூக்கில் பிணமாக தொங்கி இருந்ததைப் பார்த்து அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இவர்கள் இருவரும் 5 நாட்களுக்கு முன்பே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர்.

பிரமிளா கடிதத்தில் எழுதியது:

அப்போது வீட்டில் சுசீந்திரன், பிரமிளா ஆகியோர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்று எழுதி வைத்திருக்கிறார்கள். இது போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் அவர்கள் எழுதி இருப்பது, எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் சந்தேகப்பட வேண்டாம். வறுமை மற்றும் உடல்நிலை சரியில்லாததால் தான் நாங்கள் தற்கொலை செய்துகொண்டோம். வீட்டு வாடகை கூட எங்களால் கொடுக்க முடியவில்லை. எனவே வீட்டில் உள்ள பொருட்களை விற்று பணத்தை வீட்டின் உரிமையாளர்களுக்கு கொடுத்துவிடுங்கள். எங்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement