மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த ஊர்மிளா உன்னி அவர்களின் மகள் உத்ரா உன்னியின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் தான் நடைபெற்றது. மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஊர்மிளா உன்னி. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் படத்தில் நடித்து உள்ளார். இவர் மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். 7 ஆம் அறிவு படத்தில் ராணியாகவும் நடித்திருந்தார். இவருக்கு உத்தரா உன்னி என்ற ஒரு மகளும் உள்ளார். உத்ரா உன்னி அவர்கள் திரைப்பட நடிகையும், பரதநாட்டிய நடன கலைஞரும் ஆவார்.

நடிகை உத்ரா உன்னி அவர்கள் தன்னுடைய பரதநாட்டியக் கலையை பல்வேறு மேடைகளில் அரங்கேற்றம் செய்து உள்ளார். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் பல வெளிநாடுகளிலும் சென்று தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இவர், யுனஸ்கோ இன்டர்நேஷனல் டான்ஸ் கவுன்சிலிங்கில் ஒருவராகவும் உள்ளார். இவர் கொச்சினில் டெம்பிள் ஸ்டெப்ஸ் என்ற ஒரு டான்ஸ் ஸ்கூலுலையும் நடத்தி வருகிறார்.
இதையும் பாருங்க : மாலத்தீவு கடற்கரையில் நீச்சல் உடையில் ஹன்சிகா கொடுத்த போஸ். வைரலாகும் புகைப்படம்.
இந்நிலையில் நடிகை உத்திரா உன்னி அவர்கள் கரோனா வைரஸ் தாக்குதலினால் தன்னுடைய திருமணம் கொண்டாட்டங்களை ஒத்திவைத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சில மாதங்களாக உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கரோனா வைரஸ். உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கரோனா வைரஸினால் 50,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
https://www.instagram.com/p/B9qHZ7SAV9u/
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது இது உலகில் பல இடங்களில் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள். இதனால் திருமணம், விழா போன்ற பல நிகழ்ச்சிகளை தள்ளி வைக்க அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகை உத்ரா உன்னி அவர்கள் தன்னுடைய திருமண கொண்டாட்டங்களை தள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, உலகில் பலர் இந்த கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
இந்த நிலைமை அமைதி அடையும் வரை எங்கள் திருமண கொண்டாட்டங்களை ஒத்தி வைக்க முடிவு செய்து உள்ளோம். திருமண தேதி அன்று கோவிலில் எளிமையாக தாலிகட்டு விழாவை நடத்துகிறோம். வரவேற்பு தேதி மற்றும் மற்ற தகவல்கள் எல்லாம் விரைவில் வெளியிடுகிறேன். எல்லோரும் தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள். உங்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். உலகத்தை விரைவாக மீட்க விரும்புகிறேன் என கூறி உள்ளார். இப்படி நடிகை உத்ரா உன்னி பதிவிட்ட ட்விட்டை பார்த்து பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.





