எனக்கு போலீஸ் டிரஸ் போடவே உடம்பு கூசுது..! இது கொலை.! கண்ணீர் விட்ட பிரபல சீரியல் நடிகை

0
498
nilani

நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காவல் துறையினரால் 11 அப்பாவி பொது மக்கள் நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். சொந்த மண்ணில் தன் இனத்தாலே சுட்டுக் கொல்லப்பட்ட இந்த கொடுமையான செயலை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காவல் துறையினர் நடத்திய இந்த வன்முறையாட்டத்திற்கு பொது மக்களும், அரசியல் பிரமுகர்களும், சினிமா துறை கலைஞர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினரின் இந்த வெறி செயலை கண்டித்து சன் டிவியில் “பிரியமானவன்” தொடரில் நடித்து வரும் நிலானி, காவல் துறை மீதான தனது கண்டனத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் அந்த வீடியோவில் ஒரு தொடருக்காக காவல் உடையை அணிந்துள்ள நிலானி, தான் இந்த உடையை அணிந்திருப்பதற்கு மிகவும் கேவலமாக உணர்வதாகவும். இந்த ஆடையை அணிந்திருப்பது தனக்கு அருவருப்பாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.