இரண்டு கைகளும் இல்லாத போதிலும் வாத்தி கம்மிங் பாடலுக்கு ட்ரம்ஸ் அடித்து அசத்திய மாற்றுத்திறனாளி.

0
604
vaathi

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு நடிகர் ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ என்ற திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து நடிகர் ‘தளபதி’ விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் தான் ‘மாஸ்டர்’. இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ரொம்பவும் ஸ்பெஷல். ஆம், ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர்.

அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’-யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

அதுவும் மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இந்த படத்தில் மாஸான வில்லன் வேடமாம். இதில் ஹீரோயினாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.

Image

சமீபத்தில், இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷன் நடைபெற்றது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடலை மாற்றுத்திறனாளி ஒருவர் வாசிக்கும் வீடியோ பதிவை இசையமைப்பாளர் அனிருத் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இவ்வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. ஆகையால், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு, ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement