தெறி பட வில்லன் நடிகர் தீனாவின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா.!

0
2590
Dheena
- Advertisement -

பொதுவாக சினிமாவில் ஒரு சில வில்லன் நடிகர்கள் மட்டுமே ரசிகர்களால் பெரிதும் கவனிக்க படுகின்றனர். இருப்பினும் ஒரு சில வில்லன் நடிகர்கள் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் வில்லன் நடிகரான தீனா தனது வில்லத்தனமான நடிப்பால் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.

-விளம்பரம்-
Image result for வில்லன் நடிகர்  தீனா

கமல் நடித்த விருமாண்டி படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தீனா. முதல் படமே கமல் படம் என்பதால் இவர் நடித்த பெரும்பாலான படங்களில் இவரது வில்லத்தனத்தையும் தாண்டி இவரது நடிப்பும் வெகுவாக பாராட்டபட்டது.

இதையும் படியுங்க : நீச்சல் உடையில் போஸ் கொடுத்த துள்ளுவதோ இளமை நடிகை ஷெரின்.!

- Advertisement -

விருமாண்டி படத்திற்கு பின்னர் தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இதுவரை ஜில் ஜங் ஜக், தெறி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் தீனா. மேலும், தனுஷ் நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படத்திலும் ஒரு முக்கிய வில்லனாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது.

தீனாவிற்கு திருமணம் முடிந்து ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார். சமீபத்தில் இவரது குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. என்னதான் தீணா சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் இவரது பிள்ளைகள் இருவரும் அரசு பள்ளியில் தான் படித்து வருகிறார்களாம்.

-விளம்பரம்-
dheena

இவர் சமீபத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த ‘காதல்’ பட நடிகர் விருச்சிககாந்துக்கு அடைக்கலம் கொடுத்து தற்போது சினிமா வாய்ப்புகளையும் பெற்றுத்தர உதவியுள்ளார்.அதே போல ராயபுரத்தை சேர்ந்த தனுஸ்ரீ என்ற ஏழைச் சிறுமிக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்தால் தான் உயிர் பிழைக்கும் நிலை இருந்தது.

அறுவை சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் செலவாகும் என்பதால் அந்த சிறுமியின் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். உடனே அந்த சிறுமிக்கு சிகிச்சைக்கும் தேவைப்டும் பணத்தை விட அதிகமாகவோ உதவிகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமாவில் வில்லனாக நிஜத்தில் ஹீரோவாக இருந்து வருகிறார் தீனா.

Advertisement