வடசென்னை கேங்ஸ்டர் கதை கிடையாது..! கதை இதுதான்..! ரகசியத்தை வெளியிட்ட வெற்றிமாறன்

0
428
vetri-maaran

வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து வட சென்னை என்ற படத்தை எடுத்துள்ளனர். தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் நடிகைகள் ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்களும் மற்றும் நடிகர்கள் கிஷோர் ,சமுத்ரகனி, கருணாஸ் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.

vada-chennai

- Advertisement -

இந்த படத்தின் கதை சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. வட சென்னையில் வசிக்கும் ஒரு பன்முக திரைகலைஞரின் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள், காதல், ஆக்ஷன் போன்றவைகள் தான் படத்தின் கதையாக இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. மேலும், தனுஷ் இதில் ஒரு கேரம் போர்ட் பிளேயராக “அன்பு” என்ற கேரக்டரில் நடித்துள்ளாராம். .

அதே போல சமீபத்தில் வெளியாகி இருந்த இந்த படத்தின் ட்ரைலரை வைத்து பார்க்கும் போது, இந்த படம் வட சென்னையில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் கதையாக இருக்கும் என்று பலரும் கூறிவந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது “வடசென்னை ” படம் கேங்ஸ்டர் படமா என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

இது குறித்து விளக்கமளித்த இயக்குனர் வெற்றிமாறன், வடசென்னையில் கேங்ஸ்டர் மட்டும் தான் வசிப்பார்கள் என்று கூற முடியாது. அதே போல இந்த படமும் ஒரு கேங்ஸ்டர் படம் கிடையாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஒரு மக்கள், அவர்களது வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்றவற்றை இந்த படத்தில் காட்ட முயற்சி செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement