மாத்திரை வாங்க 1500 கூட இல்ல, உதவி செய்யுங்க – வட சென்னை பட நடிகரின் பரிதாப நிலை.

0
1463
suryakanth

உலகமே கொரோனாவின் சீற்றத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து விதமான படப்பிடிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் திரைத்துறையினர் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். சினிமா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது.

பெப்சி அமைப்புக்கு ரூ.2 கோடியே 45 லட்சம் நிதி வசூலாகி இருப்பதாக கடந்த சில வாரத்திற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பல்வேறு நடிகர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகரான சூரியகாந்த்  சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.தூறல் நின்னு போச்சு படத்தில் வில்லனாக நடித்து பெயர் பெற்றவர் நடிகர் சூரியகாந்த்.

- Advertisement -

இவர் தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்தவர். சின்ன வயதில் சினிமாவின் மீது ஏற்பட்ட பிரியத்தின் காரணமாக தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சென்னை வந்துவிட்டர். பின்னர் பல்வேறு படங்களில் வில்லன் நடிகராக நடித்து பிரபலமானவர். இறுதியாக வட சென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்ஷின் தந்தையாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் சினிமா படப்பிடிப்புகள் இல்லாததால் பொருளாதாகர ரீதியாகவும், சர்க்கரை நோய் பாதிப்பால் உடல் ரீதியாகவும் பாதிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஒரு மாதத்துக்கு மருந்து மாத்திரை வாங்கவே ரூ.1500 செலவாகிறது. அதை வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. சாப்பாட்டுக்க வழியில்லாமல் இருக்கிறேன். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்

-விளம்பரம்-
Advertisement