6 லட்ச ரூபாய் ரொக்கப்பணமாக நிதியுதவி – கண்ணீர் விட்டு அழுத பாலாஜி குடும்பத்தினர்.

0
1970

விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு பல்வேறு சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர் மேலும் நடிகர் விஜய் சேதுபதி கூட வடிவேலு பாலாஜியின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்.

- Advertisement -

பாலாஜிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். மேலும், பாலாஜியின் மனைவிக்கு எழுத படிக்கக்கூட தெரியாது. ஒரு கடைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட பாலாஜி தான் சென்று வருவாராம். பாலாஜியின் ஒரே வருமானத்தில் தான் அவரது குடும்பம் ஓடிக்கொண்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் பாலாஜியின் மறைவால் ஆதரவற்று இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு அறம் அறக்கட்டளை உதவி செய்துள்ளது.

வடிவேல் பாலாஜி குடும்பத்தை நேரில் சந்தித்துள்ள அறம் மக்கள் நலச்சங்கம் நிறுவர் ராஜா அவர்கள் 6 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘அவருடைய இழப்பு பேரிழப்பு. அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகள் அவரை விட பெரிய அளவில் வர வேண்டும். அவர்களது வளர்ச்சிக்கும் படிப்பிற்கும் அறம் அறக்கட்டளை தேவையான உதவிகளை செய்யும் ‘ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement