தனது மனைவி குறித்து வடிவேல் பாலாஜி கூறியுள்ள விஷயம் – கண்ணீர் மல்க கூறிய கிரேஸ்.

0
3932
grace
- Advertisement -

விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-
balaji

இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் தான். வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார்.

- Advertisement -

கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr &Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கருணாஸ் மனைவி கிரேஸ் பேசுகையில், அவரது மறைவை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

யாரை பற்றியும் அவர் புறம் பேசமாட்டார். அவருக்கு பொறாமை என்றால் என்னவென்று கூட தெரியாது. இளம் கலைஞர்களை ரொம்பவும் ஊக்குவிப்பார். ஒரு முறை அவரது மனைவி குறித்து என்னிடம் அவர் சொன்னார் ‘ என்னுடைய மனைவி மிகவும் வெகுளி அவரை நான் கடைக்கு போய் மளிகை சாமான் கூட வாங்கி வரச் சொல்ல மாட்டேன் நான் தான் அவளை பார்த்துக் கொள்வேன் என்று கூறினார். அவரது குடும்பம் இதிலிருந்து மீண்டு வந்து மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என்று கண்கலங்கி கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement