வடிவேலு பாலாஜி மகன் அளித்து இருக்கும் லேட்டஸ்ட் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நபராக இருந்தவர் வடிவேலு பாலாஜி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் காமெடியனாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர்.

இவர் முதலில் கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும், அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள், நடனம் என்று வடிவேலுவை போல மிமிக்ரி செய்து அசத்தியவர் பாலாஜி.
வடிவேலு பாலாஜி குறித்த தகவல்:
இதனால் தான் இவரை வடிவேல் பாலாஜி என்று அழைத்தார்கள். மேலும், இவர் நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேலுவின் அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார். இவர் சிரிச்சா போச்சு, ராஜு வீட்ல பார்ட்டி, ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் வடிவேலு பாலாஜி கலந்து கொண்டிருந்தார். பின் வடிவேல் பாலாஜி 2020ல் திடீரென உடல் நலக் குறைவால் காலமானார்.

வடிவேலு பாலாஜி மரணம்:
வடிவேல் பாலஜியின் திடீர் மரணம் சின்னத்திரை மற்றும் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதோடு வடிவேல் பாலாஜி இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு உடல்நலகுறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதற்குப் பிறகு அவருக்கு ஸ்டோரக் வந்து இரண்டு கைகளும் செயல் இழந்து, பின் உடலில் உள்ள மற்ற உறுப்புகள் வேலை செய்யாமல் போனது. அதன் பின் ரத்தக் கசிவு ஏற்பட்டு பாலாஜி மரணம் அடைந்தார்.

வடிவேலு பாலாஜி மகன் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் வடிவேலு பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், அப்பா இல்லாமல் ரொம்பவே கஷ்டப்படுகிறோம். அப்பா இருந்தவரை எந்த ஒரு கஷ்டமும் தெரியாமல் என்னை வளர்த்தார். அப்பா போனதுக்கு பிறகு எங்கள் குடும்பம் ரொம்பவே கஷ்டப்படுகிறது.
குடும்ப நிலை:
நான் இப்போதுதான் ஒரு வண்டி வாங்கினேன். ஆனால், அதன் இஎம்ஐ கட்டம் கூட முடியாமல் ரொம்ப கஷ்டப்படுகிறேன். அதை கட்டுவதற்கு ரொம்ப சிரமமாக இருக்கிறது. அப்பா இருந்தால் இந்த கஷ்டம் எங்களுக்கு கிடையாது. என்னோட ஆசை இப்போது எனக்கு அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார்.






