உடன் நடித்தவர் யாருமே இல்லை.! கிருஷ்ணமூர்த்தியை நினைத்து மனம் வருந்திய வடிவேலு.!

0
7431
vadivelu

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்கள் இருந்தாலும் அவர்களது படங்களில் துணை காமெடி நடிகர்களாக நடித்து மக்கள் மனதில் பிரபலமான நடிகர்கள் எத்தனையோ நபர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழில் விவேக், வடிவேலு, சந்தானம் என்று பல்வேறு காமெடி நடிகர்களின் படங்களில் துணை காமெடி நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காமெடி நடிகர் கிருஷ்ண மூர்த்தி. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் படபிபிடிப்பின் போது மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் தமிழ் திரையுலகை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

This image has an empty alt attribute; its file name is 093324_Krishnamurthy12.JPG

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் வடிவேலுவின் காமெடி குழுவில் இருந்து வந்த கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவில் புரொடக்ஷன் மேனஜராகவும் இருந்து வந்தார். இதனால் அவ்வப்போது சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் கூட பணியாற்றி வந்தார். இதுவரை பல்வேறு திரைப்படங்களில் புரொடக்ஷன் மேனஜராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் நேற்று தேனீ மாவட்டம் குமுளியில் நடைபெற்று வந்த ஒரு படத்தின் படப்பிடிப்பில் கடந்து கொண்டு இருந்தார். அப்போது அதிகாலை அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனைக்கு படக்குழு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், எதிர்பாராத விதமாக அவர்கடந்த 7 ஆம் தேதி (திங்கள் கிழமை )காலை 4.30 மணியளவில் இருந்து விட்டார். இந்த செய்தி பட குழுவினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

நடிகர் கிருஷ்ணமூர்த்தியின் மறைவிற்கு தமிழ் திரைப்பட நடிகர்கள் அனைவரும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். வடிவேலு காமெடி குழுவில் இருந்து வந்த இவர் புரொடக்ஷன் மேனஜராகவும் இருந்து வந்தார். இதனால் அவ்வப்போது சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் கூட பணியாற்றி வந்தார். இதுவரை பல்வேறு திரைப்படங்களில் புரொடக்ஷன் மேனஜராகவும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் நடிகர் வடிவேலு, கிருஷ்ணமூர்த்தியின் மறைவு குறித்து மனம் வருந்தி பேசியுள்ளார், இதுகுறித்து பேசியுள்ள வடிவேலு, கிருஷ்ண மூர்த்தி என்னுடன் நடித்தவர் என்பதை விட என் குடும்ப நண்பர், என்னுடைய குடும்பத்தாருக்கும் அவருக்கும் நல்ல பந்தம் இருந்தது. அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. என்னுடன் நடித்த என்னத்த கன்னையா, அல்வா வாசு, செல்ல துறை, முத்துக்காளை யாரும் இப்போது உயிரோடு இல்லை என்பதும் எனக்கு மிகவும் மன வேதனையை அளிக்கிறது என்று மிகவும் மனம் நொந்து போய் கூறியுள்ளார் வடிவேலு.

krishna-moorthi

வடிவேலு, ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சிங்கமுத்துவுடன் இணைந்து காமெடி காட்சிகளை எழுதி நடித்து வந்தார் வடிவேலு. பின்னர் ஒரு கட்டடத்தில் அவருக்கும் வடிவேலுவுக்கும் மன வருத்தம் ஏற்பட்டு பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் அரசியல் சூழ்ச்சியால் வடிவேலு சினிமாவில் சில ஆண்டு காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இது போக இம்சை அரசன் படத்தில் பண பிரச்னையிலும் சிக்கியுள்ளார் வடிவேலு. இருப்பினும் ஒரு சில படங்களில் அவ்வப்போது தலை காண்பித்தும் வருகிறார். இருப்பினும் வடிவேலுவுடன் நடித்த பெரும்பாலானோர் தற்போது வடிவேலுவுடன் இல்லாததால் வடிவேலு திரை வாழ்க்கையை தொடருவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.