தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான “பிகில்” படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று உள்ளது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜய்யின் 64வது படமான “மாஸ்டர்” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள்.
https://twitter.com/vijaysrig/status/1213073627811172358
அதுமட்டும் இல்லாமல் இந்த படம் கோடை விடுமுறைக்கு திரை அரங்கில் வெளியிடப்படும் என்ற தகவல் வந்து உள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடந்து முடிந்தது. மேலும், இந்த படத்தின் பஸ்ட் லூக் போஸ்டர் வெளிவந்ததில் இருந்து ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் அவர்கள் மீசை இல்லாமல் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், விஜய் மீசை இல்லாமல் நடித்ததற்கு தன்னுடைய கற்பனை தான் காரணம் என்று கூறியுள்ளார் பிரபல இயக்காரனார் விஜய் தமிழ் சினிமாவில் 80 வயது ஆன நடிகர் சாருஹாசன் அவர்கள் ஹீரோவாக நடித்த படம் "தாதா 87".
இதையும் பாருங்க : கடலில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.
இந்த படத்தை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் விஜய் ஸ்ரீ .ஜி இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று பாராட்டப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் விஜய் ஸ்ரீ அவர்கள் தளபதி விஜய்யின் ரசிகராம். அதனால் கடந்த ஆண்டு தளபதி விஜயின் பிறந்த நாளுக்கு விஜய் அவர்களை மீசை இல்லாதது போல் வரைந்து அந்த போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். தற்போது அந்த புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்யை மீசையில்லாமல் ஒரு காட்சியில் நடித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த இயக்குனர் விஜய் அவர்கள் என்னுடைய கற்பனை நிஜமாக்கியதற்கு விஜய்க்கும், லோகேஷ் கனகராஜ்க்கும் நன்றி என சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.
வீடியோவில் 13 :08 நிமிடத்தில் பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=fnYi1kHu0Qk&feature=youtu.be
அதோடு விஜயை மீசை இல்லாமல் பார்ப்பதற்கு ரசிகர்களுடன் நானும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் என்றும் கூறி இருந்தார். இயக்குனர் விஜய் ஸ்ரீ அவர்கள் 2019 ஆம் ஆண்டு தாதா 87 என்ற படத்தை இயக்கி இருந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் விஜய் ஸ்ரீ அவர்கள் தற்போது பப்ஜி என்ற பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சியான் விக்ரம் அவர்களின் மருமகன் அர்ஜுமன் நடித்து உள்ளார். இவர்களுடன் இந்தப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா, கனகராஜ், மொட்டை ராஜேந்திரன், பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.





