18 ஆண்டுகள் கழித்து இணைந்த காம்போ – காலங்கள் கடந்தாலும் மாறாத வடிவேலுவின் Reaction. வைரலாகும் வீடியோ (இதெல்லாம் 90ஸ் கிட்ஸ்க்கு தான் புரியும்)

0
737
prabudeva
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் காமெடி கிங்காக திகழ்பவர் வைகைப்புயல் வடிவேலு. சோசியல் மீடியா என்றாலே இவருடைய காமெடியும், புகைப்படங்களும் தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. 24 ஆம் புலிகேசி பட பிரச்னையால் சில ஆண்டுகளாக சினிமாவில் தடை பெற்று இருந்த வடிவேலு தற்போது மீண்டும் நடிக்கத்துவங்கி இருக்கிறார். தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வரும் வடிவேலு. மாரி செல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு கூட சமீபத்தில் தான் வெளியானது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகர் வடிவேலு மற்றும் பிரபுதேவா இருவரும் இணைந்து பாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பிரபுதேவா மற்றும் வடிவேலு நடித்த மனதை திருடிவிட்டாய் படத்தில் இடம்பெற்ற சிங் இன் தி ரெயின் பாடலை தனக்கே உரிய பாடி லாங்குவேஜில் பாட அதை பார்த்து பிரபுதேவா சிரிப்பை அடக்க முடயாமல் இருக்கிறார். பின்னர் இறுதியில் இருவரும் கட்டி அனைத்து பாசத்தை பொழிந்துள்ளனர்.

- Advertisement -

18 ஆண்டுக்கு பின் இணைந்த பிரபுதேவா :

நாய் சேகர் படத்தில் வடிவேலு பாடவுள்ள பாடலுக்கு நடனப் பயிற்சி அளிக்க நடிகர் பிரபுதேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு – பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. மேலும் இப்பாடலில் பிரபுதேவா ஒரு காட்சியில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை அந்த படத்தின் போது எடுத்த வீடியோ தானா இது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வடிவேலு – பிரபுதேவா காம்பினேஷன் ;

வடிவேலுவின் காம்பிநேஷனின் பலர் நடித்துள்ளார்கள். அதில் ஒரு சில ஹீரோக்கள் மட்டுமே வடிவேலுவின் வேவ் லெந்திற்கு கச்சிதமாக போருர்ந்தினர். அதில் ஒன்று பார்த்திபன் மற்றொன்று பிரபுதேவா தான். பிரபுதேவா மற்றும் வடிவேலு இருவரும் பல படங்களில் நடித்து இருக்கின்றனர். பிரபு தேவாவின் இரண்டாவது படமான காதலன் துவங்கி அவர் நடித்த பல படங்களில் வடிவேலு நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மனதை திருடிவிட்டாய் :

அதிலும் குறிப்பாக தற்போது வடிவேலு பேசி இருக்கும் இந்த வசனம் இடம்பெற்ற ‘மனதை திருடிவிட்டாய்’ படத்தில் வடிவேலு மற்றும் பிரபுதேவாவின் காமெடியோடு சேர்ந்து மறைந்த நடிகர் விவேக்கும் அவர் பங்கிற்கு அசத்தி இருப்பார். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் வடிவேலு பாடிய இந்த ”சிங் இன் தி ரெயின்” பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து பெரும் பிரபலம் ஆனது என்று தான் சொல்ல வேண்டும்.

இறுதியாக நடித்த படம் :

இறுதியாக கேப்டன் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தில் இறுதியாக வடிவேலு – பிரபு தேவா இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பிரபு தேவா இயக்கிய போக்கிரி, வில்லு ஆகிய இரண்டு படங்களிலும் வடிவேலு நடித்து இருந்தார். தற்போது மீண்டும் வடிவேலுவுடன் பிரபுதேவா பணியாற்ற இருப்பது 90ஸ் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement