அய்யனாரு கண்ண தொறந்து கதவையும் தொறந்துவிட்டாரு அண்ணே – ரெட் கார்டு பிரச்சனை. வடிவேலுவின் ஹேப்பி ஆடியோ.

0
5579
vadivelu
- Advertisement -

ஷங்கர் மற்றும் வடிவேலுவுக்கு இடையிலான பிரச்சனை தற்போது சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்கள். இந்த படத்தையும் ஷங்கர் தான் தயாரித்து வந்தார். இந்த படம் பிரச்சனை காரணமாக ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது . ஒரு கட்டத்தில் இந்த படம் அப்படியே முடங்கி விட்டது.

இதையும் பாருங்க : லண்டன் மாப்பிள்ளை, மூன்று குழந்தைகளுக்கு தாய் – ஈரம், யூத் பட நடிகையா இது.

- Advertisement -

இதையடுத்து படத்தில் தான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் ஷங்கர் மற்றும் வடிவேலுவுக்கு இடையிலான பிரச்னையில் தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு சுமுகமாக பிரச்சனையை தீர்த்துள்ளது.

இதுகுறித்து பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள வடிவேலு, அய்யனாரு கண்ண தொறந்து கதவையும் தொறந்துவிட்டாரு அண்ணே. எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்துடுச்சி. ரெண்டு தரப்புலயும் சமரசம் பேசியாச்சு. இனிமே நிறைய நல்ல படங்கள் பண்ணனும். அடிக்கடி சந்திப்போம் என்று மிகவும் உற்சாகமாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement