தமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு 23 ஆம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். பின் இடையில் சில பிரச்சனைகளால் சமீப காலமாக இவருக்கு சினிமாவில் நடிக்க தடை விதைக்கப்பட்டு இருந்தது.

இப்படி ஒரு நிலையில் அந்த தடை நீக்கப்பட்டு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் வடிவேலு. தற்போது இவர் தொடர்ச்சியாக லைகா நிறுவனம் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்க இருக்கிறார். அதில் ஒரு படமான நாய் சேகர் படத்தை 'தலைநகரம்' பட இயக்குனர் சுராஜ் இயக்க இருக்கிறார் என்பது கூறிப்பித்தக்கது.
இப்படி ஒரு நிலையில் வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பல ஆண்டுகள் கழித்து தன் சினிமா வாழ்கை பிரச்சனைகள் தீர்ந்து வடிவேலு கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. நடிகர் வடிவேலு அவர்களை சினிமா துறையில் முதன் முதலாக அறிமுகம் செய்தவர் நடிகர் ராஜ்கிரன் தான் என்று பல இடங்களில் சொல்லி கேள்விப்பட்டிருக்கின்றோம்.

பலமுறை நடிகர் ராஜ்கிரன் அவர்களே வடிவேலுவை அறிமுகப்படுத்தியது நான் தான் என்று கூறி இருக்கிறார். வடிவேலு அவர்கள் முதன் முதலாக 1988 ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த என் தங்கை கல்யாணி என்ற படத்தில் தான் நடித்திருக்கிறார். இந்த படத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.இதற்குப் பிறகு தான் நடிகர் வடிவேலு அவர்கள் 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்திருந்தார்.





