காமெடி நடிகரின் படத்தால் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ படத்திற்கு வந்த சிக்கல் – இவருக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ ?

0
1867
vadivelu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக காமெடி நடிகராக வலம் வருபவர் வைகை புயல் வடிவேலு. இவர் எண்ணற்ற படங்களில் நகைச்சுவை நடிகராகவும், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து உள்ளார். அந்த வகையில் இவர் சங்கர் இயக்கத்தில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். ஆனால், வடிவேலுவுக்கும், சங்கருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக படம் நிறுத்தப்பட்டதது. இதனால் நடிகர் வடிவேல் மீது ரெட் கார்டு போடப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ தயாரிப்பார் சங்கருக்கு லைக்கா நிறுவனம் 5 கோடி கொடுத்து வடிவேலுவை தன் பக்கம் இழுத்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

மேலும், வடிவேலு மீது போடப்பட்ட ரெட் கார்டு நீங்கி விட்டது என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வடிவேலு அவர்கள் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் தன்னுடைய அடுத்த படத்தை லைக்கா நிறுவனத்துக்காக நடிக்க போகிறேன் என்றும் இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார் என்றும் இந்த படத்திற்கு நாய் சேகர் என்று தலைப்பு வைப்பதாகவும் கூறியிருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்றும் கூறினார். இந்த நிலையில் வடிவேலு நடிக்கவிருக்கும் நாய் சேகர் படத்தின் டைட்டலில் சில பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அது என்னவென்றால், இந்த படத்தின் டைட்டில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜாவிடம் இருந்தது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சதீஷ் முதன்முதலாக கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி நடிக்க இருக்கிறார். இந்த படத்தினை கிஷோர் இயக்குகிறார். மேலும், இந்த படத்தின் கதையை ஏஜிஎஸ் நிறுவனத்திடம் கிஷோர் சொன்னபோது ‘நாய் சேகர்’ என்ற தலைப்போடு தான் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் என்பதாலும், அவர் மீது இருந்த நட்பினாலும் அந்த தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனத்திடம் ஞானவேல்ராஜா கொடுத்துவிட்டார்.

அதுமட்டும் இல்லாமல் இந்த தலைப்பை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் வடிவேலு தன்னுடைய அடுத்த படத்திற்கு நாய் சேகர் தலைப்பு வைத்திருப்பதாக சொல்லி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது வடிவேல் அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் வந்த பிறகுதான் மக்களுக்கு நல்ல காலம் வந்ததாகவும், என்னுடைய வாழ்வும் நன்றாக இருக்கிறது என்றும் திமுகவுக்கு ஆதரவாக பேசி இருப்பதால் தன்னுடைய அரசியல் பலம் மூலம் எப்படியாவது இந்த தலைப்பை வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இருப்பதாக ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. ஆக மொத்தத்துல நாய் சேகர் என்ற தலைப்பு வடிவேலுக்கா? சதீசுக்கா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement