அஜித்தை கலாய்த்த ஏறிவாயா காமெடி நடிகர்.! அப்புறம் என்ன செய்தார் பாருங்க.!

0
1410
erivaaya
- Advertisement -

ஷாம் நடிப்பில் வெளியான ஏ பி சி டி படத்தில் வடிவேலு பேருந்து நடத்துனராக நடித்திருப்பார். அந்த படத்தில் வடிவேலு ,பேருந்தில் படியில் தொங்கும் ஒருவரை
வடிவேலு என்னை `ஏறி வாயா’ என்பார் அதற்குஅந்த நபர் , `நீதான் ஏரி வாயன், நாய் வாயன், தவளை வாயன், குரங்கு வாயன், பன்றி வாயன்’னு கூறுவார்.

-விளம்பரம்-
ஏறிவாயா ஷேக்

அதற்கு வடிவேலுவோ `டேய், மேல ஏறி வா’னு சொன்னேன்டானு கூறுவார். இந்த நகைச்சுவை காட்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர்`ஏறிவாயா’ ஷேக். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

- Advertisement -

அதில், நான் தெனாலி ராமன்’, `நேபாளி’, `ஏமாலி’னு பல படங்களில் நடிச்சிருக்கேன். `என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத் சாரைக் கலாய்க்கிற சீன் வரும். ஆட்டோ டிரைவரா அதுல வருவேன். அஜீத் போலீஸ்னு தெரிந்ததும், சல்யூட் அடிப்பேன். தட்டிக் கொடுத்து, `யார்கிட்டேயும் சொல்லதீங்க’னு அனுப்பி வைப்பார்.

ஏறிவாயா ஷேக்

எத்தனையோ பேருக்கு அவர்கூட போட்டோ எடுக்கமாட்டோமானு ஆசை இருக்கும். எனக்கு அவர்கூட நடிச்சது மிகப்பெரிய சந்தோஷம். இப்போ, திரைப்படக் கல்லூரியில் ஆக்டிங், டைரக்‌ஷன் மாஸ்டராக இருக்கேன். என்னுடைய `ஒரே வார்த்தை’ குறும்படம், நியூஸ் 7 தொலைக்காட்சியின் குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றது”

-விளம்பரம்-
Advertisement