நாங்க யாரையும் ஏமாத்தல – டாக்டர் பட்டம் சர்ச்சை குறித்து ஏற்பாட்டாளர் வெளியிட்ட வீடியோ.

0
370
doctorate
- Advertisement -

பாடகர் தேவாவிற்கும், நடிகை வடிவேலுவிற்கும் போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் விருது வழங்கிய அமைப்பில் இயக்குனர் ஹரிஷ் பேசியுள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே திரை துரையில் இருப்பவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் சமீபத்தில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை சங்கம் என்ற அமைப்பின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள். பின் இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் தேவா மற்றும் நடிகர்கள் கஜராஜ், ஈரோடு மகேஷ், நடன இயக்குனர் சாண்டி, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் போன்ற பலருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருந்தது. இவர்களுடன் நடிகர் வடிவேலுக்கும் டாக்டர் பட்டத்தை கொடுத்தார்கள். ஆனால், இந்த பட்டத்தை நடிகர் வடிவேலு வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொண்டிருந்தார்.

- Advertisement -

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை சங்கம் அமைப்பு:

மேலும், இந்த பட்டங்களை எல்லாம் ஓய்வு பெற்ற நீதிமன்ற நீதிபதி வள்ளி நாயகத்தை வைத்து வழங்கியிருந்தார்கள். இந்த நிலையில் வடிவேலுக்கு கிடைத்த கௌரவ டாக்டர் பட்டம் போலியான பட்டம் என்று அதிர்ச்சி தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து சம்மந்தப்பட்ட துறையினர் கூறியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில் இந்த விஷயம் குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

விருது வழங்கிய அமைப்பின் இயக்குனர் ஹரிஷ் பேசியது :

இந்த நிலையில் தான் இது குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் ஹரிஷ் ராஜு பேசுகையில் “விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்துவதற்கான அனுமதி எங்களிடம் இல்லை என்று கூறினார்கள். எல்லா அனுமதிகளை பெற்ற பின்னர் தான் இந்த விருது வழங்கும் விழாவை நடத்தினோம். அதே போல விருது கொடுப்பதற்கான எந்த தகுதியும் உங்களுக்கு இல்லை என்று அதில் கூறியிருந்தார்கள். ஆனால் அதற்கான அனுமதியும், தகுதியும் எங்களிடம் இருக்கிறது என்று கூறினார்.

-விளம்பரம்-

மேலும் இது அண்ணா பல்கலை கலக்கம் கொடுத்த விருது என்று கூறியிருக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறான விஷியம். இந்த விருது வழங்கும் விழா அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த ஒரு விழாவே தவிர மற்றபடி எதுவும் கிடையாது. இது குறிப்பிட்டு ஒரு சேனலும் மட்டும் தான் இந்த தவறான தகவலை கூறியிருக்கின்றனர். அந்த தகவலை இன்னும் அவர்கள் மாற்றவில்லை. எனவே சட்ட வல்லுநர்களை வைத்து இந்த பிரச்சனைக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் யாரும் வருந்த வேண்டாம் இது போலியான விருது கிடையாது என்று கூறினார்.

வள்ளிநாயகம் கூறியது :

ஆனால் இது குறித்து பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் இருந்து அந்த கடித்தை அவர் கொடுக்கவே கிடையாது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்வுக்கான அமைப்புகளில் இந்திய அரசின் முத்திரையும், அண்ணா பல்கலைக்கழக பெயரும் அச்சிடப்பட்டிருக்கிறது. இது சட்டவிரோதமான செயல் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்வுக்காக சிறப்பு விருந்தினராக தான் நீதிபதி அழைக்கப்பட்டார் என்று நீதிபதி தரப்பில் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்வுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பல்கலைக்கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

துணைவேந்தர் வேல்ராஜ் அளித்த பேட்டி:

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக துணைவேந்தர் வேல்ராஜ் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பொதுவாகவே இந்த மாதிரியான விருது வழங்கும் விழாக்களை தனியார் அமைப்புகள் ஹோட்டல்களில் நடத்துவது தான் வழக்கம். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் இதுபோன்ற கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது கண்டிக்கத்தக்க ஒன்று. மேலும் டாக்டர் பட்டங்களை பல்கலை கலகம் தான் கொடுக்கும் தனியார் நிறுவனம் கொடுக்காது.

நீதிபதி வள்ளி நாயகத்திடம் இந்த நிகழ்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது என்றும், நீதிபதி பங்கு பெற இருக்கிறார் என்றும் எங்களிடம் அவர்கள் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதை எல்லாம் செய்யவில்லை. இதற்காக நாங்கள் வருந்துகிறோம். இது தொடர்பாக நாங்கள் போலீஸ் இடம் புகார் அளித்திருக்கிறோம். சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதிலிருந்து தெரிய வருவது :

இப்படி பல இந்த அமைப்பின் மீது குற்றம் சாட்டினாலும் இதற்கெல்லாம் அந்த அமைப்பின் இயக்குனர் ஹரிஷ் ராஜு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தாங்கள் இந்த விஷியத்தை சட்ட ரீதியாக பார்த்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்கையில் ராஜு சொல்வதும் நீதிபதி வள்ளிநாயகம் மற்றும் துணைவேந்தர் வேல்ராஜ் கூறுவதும் ஒன்றுக்கு ஓன்று மாறுபட்டதாக இருக்கிறது. அதே போன்று அனுமதி இல்லாமல் அரசின் முத்திரை பயன்படுத்தியது சட்டப்படி குற்றமாகும்.

ஹரிஷ் தலைமறைவு :

மேலும் இந்த விஷயம் சர்ச்சையாக மாறியபோது இவர் தன்னுடைய போனை சுட்ச் ஆஃப் செய்துவிட்டார், அதோடு இவர்களது கம்பெனி பற்றிய சில விஷியங்கள் மற்றும் அவர்களுடைய இணையதளம் தெளிவாகி இல்லை என்பதும், இந்த விஷயம் குறித்து பேசிய ஹரிஷ் தற்போது தலைமறைவாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது. இந்நிலையில் ஹசிரிஷ் ராஜு பேசிய வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

Advertisement