தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இவருடைய உண்மையான பெயர் கேதீஸ்வரன். இவர் பல போராட்டங்களுக்கு பிறகு தான் பாக்யராஜை சந்தித்து சினிமா வாய்ப்பு கிடைத்து இருந்தது. இவர் 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து விவேக், வடிவேலு, சந்தானம் என்று பலர் காமெடி நடிகர்களுடன் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போண்டா மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட விஷவாயுவால் போண்டா மணி பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் நடிகர் போண்டா மணிசென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

Advertisement

மேலும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், அவரது சிகிச்சைக்காக தனுஷ், விஜய் சேதுபதி, சுகாதார துறை அமைச்சர் .சுப்பிரமணியன் போன்ற பலர் உதவி செய்து இருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் போண்டா மணி. ஆனால், அவரது உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் தேதி இரவு காலமாகி இருந்தார்.

இவரது இறப்பிற்கு பல்வேறு பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதிலும் குறிப்பாக காமடி நடிகர்களான முத்துக்காளை, சிங்கமுத்து, பாண்டி, பெஞ்சமின் என்று பலர் போண்டா மணி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இப்படி ஒரு நிலையில் போண்டா மணியின் உடலலுக்கு அஞ்சலி செலுதிவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் வேதனையுடன் பேசி இருந்தார்.

Advertisement

அப்போது அவரிடம் வடிவேலுவுடன் நிறைய படங்களில் போண்டா மணி நடித்து இருக்கிறார். ஆனால், அவர் இறப்பிற்கு கூட வரவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சாரப்பாம்பு சுப்புராஜ் ‘ அத அவர்கிட்ட தான் போக மாட்டார். அவர் யார் செத்தாலும் போக மாட்டார். விவேக் செத்ததுக்கு போல அல்வாவாசு செத்ததுக்கு போல’ அவர் போகும் போது யார் போவாங்க என்று பேசி இருக்கிறார்.

Advertisement

ஏற்கனவே போண்டா மணி மருத்துவமனையில் இருந்த போது அளித்த பேட்டி ஒன்றில் வடிவேலு உங்களை தொடர்பு கொண்டாரா என்று கேட்டதற்கு இல்லை, விவேக் சார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நான் யார்கிட்டயும் கையேந்த வேண்டிய அவசியமே வந்து இருக்காது. அவரே ஓடிவந்து உதவியிருப்பார் என்றும் வேதனையுடன் கூறி இருந்தார், இதனை தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது செய்தியாளர் ஒருவர் போண்டா மணி உதவி கேட்டு இருக்கிறாரே என்று கேட்டதற்கு ‘ஆமா, உதவி பண்ணனும்’ என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement