டாக்டர் பட்டம் கிடைத்துவிட்டது என்று எம்.ஜி.ஆர் பாட்டு பாடி மகிழ்ந்த விடிவேலுவிற்கு காத்திருந்த அதிர்ச்சி.

0
507
vadivelu
- Advertisement -

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் போலியான டாக்டர் பட்டங்களை கொடுத்ததாக தற்போது எழுந்துள்ள புகார் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைகை புயல் வடிவேலுவுக்கு நேற்று ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பிரிவின் கீழ் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இதேபோல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதை பாராட்டும் பொருட்டு துணை நடிகர் கோகுலுக்கு சிறப்பு விருதும் கொடுக்கப்பட்டது. முன்னதாக இந்த அமைப்பு சமூக சேவைக்கான டாக்டர் பட்டத்தை நடிகர் நடிகர் ராகவா லாரன்ஸிற்கு வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. யூடியூபில் வீடியோ போடும் கோபி மற்றும் சுதாகருக்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்த படங்களை கொடுத்த அமைப்பு போலியானது என்ற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதாவது மோசடி செய்த நபர்கள் தங்களை சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்று கூறி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் கொடுப்பதாக அழைப்பிதழ்களில் பெரிதாக அச்சிட்டுள்ளனர். மேலும் அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரையை சட்டவிரோதமாக அந்த அழைப்பிதழில் அச்சிட்டு ஓய்வு பெற்ற நீதிபதியை தற்போதய நீதிபதி என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் தங்களுக்கு அண்ணா பல்கலை கழகமே டாக்டர் வழங்குவதாக வந்தவர்கள் டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் ஏமாந்து விட்டனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த சர்வதேச ஊழல் எதிர்த்து மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தனியார் கோவில் நிர்வாகிகள், ரியல் எஸ்டேட் அதிகாரிகள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் என 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தன. மேலும் இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், நடன இயக்குனர் சாண்டி, ஈரோடு மகேஷ், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளி நாயகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

அவர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் விருதுகளை வழங்கினார். அதோடு இந்த நிகழ்ச்சிக்கு வராத வடிவேலுவுக்கு அவரது வீட்டிற்கே சென்று டாக்டர் பட்டம் வாங்கப்பட்டது. மேலும் விருது கொடுத்த நபர்கள் தங்களை ரிசர்வ் வங்கி கவர்னருடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களாக சொல்லி வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர். வடிவேலுவும் தனக்கு போலியான டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது என்று தெரியாமல் அவர் எம்.ஜி.ஆர் பாட்டு பாடி மகிழ்ந்தார்.

இந்த நிலையில் இது போலி டாக்டர் பட்டம் என்று தகவல் வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தின் அரங்கில், அரசு முத்திரையுடன் இப்படி போலியான டாக்ட பட்டம் வழங்கி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது என்பது அனைவரின் எதிரிபார்ப்பாக உள்ளது.

Advertisement