தமிழ் சினிமாவில் செந்தில் கவுண்டமணி காம்போவிற்கு பின்னர் பார்த்திபன் மற்றும் வடிவேலு ஜோடி செய்த காமெடி அனைவராலும் ரசிக்கபட்டது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு போன்ற பல படங்களில் இந்த இணை செய்த காமெடி ஏறலாம்.

இறுதியாக இவர்கள் இணைந்து படம் நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதே போல நடிகர் வடிவேலுவும் கடந்த சில மாதமாக தடையில் இருந்து வருகிறார்.சிம்புதேவன் இயக்கி 2006 ல் வெளிவந்த படம் 23 ஆம் புலிகேசி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.இந்நிலையில் மீண்டும் வடிவேலுவை வைத்து 24 ஆம் புலிகேசி இயக்கவிருந்தது.

Advertisement

23 ஆம் புலிகேசியை தயாரித்த ஷங்கர் தான் இந்த படத்தினையும் தயாரிக்க இருந்தார். இந்த நிலையில் வடிவேலு இப்படத்தில் தான் நடிக்கமாட்டேன் என கூறி திடீரென இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் படத்தை முடித்து தரும்படியும் இல்லையேல் வடிவேலுவால் ஏற்பட்ட 9 கோடி ருபாய் நஷ்டத் தொகை தரும்படியும் பட குழுவினர் புகார் அளித்தனர்.இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்தது.

தற்போது இந்த பிரச்சனைக்கு சுமுக தீர்வு கிடைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடிவேலுவுடன் ஷங்கரும், சிம்பு தேவனும் 24 ஆம் புலிகேசியில் அவரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இந்நிலையில் வடிவேலுவை மீண்டும் அழைத்து வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

Advertisement

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த பார்த்திபன், நான் சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் வடிவேலுவை கண்டிப்பாக நடிக்க வைப்பேன். படம் இப்போதைக்கு பாதி நிறைவடைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் வடிவேலு அணைத்து பிரச்னைகளையும் முடித்துவிட்டு நடிக்க வருவார் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement