6 வயது சிறுமிக்கு வடிவேலு பட துணை நடிகர் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல
மேலும், ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இவர் ரஜினி, பிரபு, சத்யராஜ், விஜய்,அஜித்,விஷால் என பல முன்ணனி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். இடையில் கொஞ்சம் பிரச்சனை என்பதால் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார்.
எலி ராஜு நடித்த படம்:
பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது வடிவேலு அவர்கள் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளிவந்த படம் எலி. இந்த படத்தில் சதா உட்படப் பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ராஜூ என்கிற எலி ராஜு நடித்திருந்தார்.
எலி ராஜு செய்த கொடூரம்:
இந்நிலையில் துணை நடிகர் எலி ராஜு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. துணை நடிகர் எலி ராஜு சாலிகிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் வசித்து வரும் 6 வயது சிறுமி வீட்டின் மேல் மாடிக்கு விளையாட சென்றிருக்கிறது. அப்போது எலி ராஜுவும் மாடிக்கு சென்று அந்த குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.
எலி ராஜு மீது பாலியல் புகார்:
பின் சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கூறி இருக்கிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பெயரில் துணை நடிகர் எலி ராஜுவை போலீஸ் பிடித்து விசாரித்து வருகிறது. மேலும், விசாரணையில் எலி ராஜு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்தது.
கைதான எலி ராஜு:
இதனால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதனை அடுத்து எலி ராஜுவுக்கு நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்தும், எலி ராஜுவை குறித்து கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.