தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் காமெடி நடிகர்களாக மாறியவர்கள் பலர் உள்ளனர். பொன்னம்பலம் துவங்கி மொட்ட ராஜேந்திரன் வரை சினிமாவில் கொடூர வில்லனாக இருந்த பலர் தற்போது நம்மை சிரிக்க வைக்கும் காமெடியன்களாக மாறிவிட்டார்கள். அந்த வகையில் வெங்கல் ராவும் ஒருவர் தான். மொட்டை ராஜேந்திரனுக்கு பின்னர் சினிமாவில் அணைத்து படங்களிலும் மொட்டை தலையுடன் தோன்றி நடிப்பவர் இவர் தான். மொட்டை ராஜேந்திரன் சினிமாவில் அறிமுகமான காலத்தில் முடியுடன் தான் இருந்தார்.

ஆனால், ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபொழுது வில்லன் ஒரு கழிவு வாய்க்காலில் குதிப்பது போன்றதொரு காட்சிக்காக அப்படியே கழிவுநீரில் குதித்துவிட்டாராம். அதன் பின்னர் அவரது உடலிலே தோல்நோய் ஏற்பட்டு அவரது உடலிலிருந்து அத்தனை முடிகளும் கொட்டத்தொடங்கி விட்டனவாம். குரலும் மாறிவிட்டதாம். அதன் பின்னர் எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சரிசெய்ய முடியவில்லையாம்.

இதையும் பாருங்க : மீண்டும் செய்தி வாசிப்பாளராக எப்போ வருவீங்க – ரசிகரின் கேள்விக்கு அனிதா சம்பத்தின் பதில்.

Advertisement

அதன் பின்னர் அவரும் மொட்டை தலையோடு நடிக்கத்துவங்கிவிட்டார். அதே போல தான் இவரும். வெங்கல் ராவ், ஆந்திராவை சேர்ந்தவர். தன் சினிமா வாழ்க்கையில் சுமார் 25 வருடத்தை ஃபைட் மாஸ்டராக இருந்து கடத்தியவர். ‘நீ மட்டும்’ படம் முதல் நகைச்சுவை நடிகரானார். சினிமாவிற்கு வரும் முன்னர் இவர் கோவில் திருவிழாக்களில் கம்பு சுற்றி அதன் மூலம் வருமானம் ஈட்டினார். அதன் பின்னர் தான் இவர் சினிமாவில் சண்டை கலைஞ்சராக அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் வாங்கிய சம்பளம் 150 ரூபாய் தான்.

பின்னர் 25 ஆண்டுகள் பைட் மாஸ்டராக இருந்த இவர் பின்னர் உடல் ஒத்துழைக்காததால் நடிப்பு பக்கம் வந்துவிட்டார். தனது மொட்டை ரகசியத்தை பற்றி சொன்ன இவர், ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், ராம்கினு பெரிய பெரிய ஆள்களோடு ஃபைட் பண்ணிட்டு இருக்கும்போதே எனக்கு மண்டையில முடி கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. இனிமே எதுக்கு இதுனு முழுக்க எடுத்துட்டேன். 25 வருடமா இந்த கெட்டப்போட இருக்கேன். இப்போ எல்லாருக்கும் என்ன தெரிகிறது என்றால் அதற்கு காரணம் இந்த மொட்டை தான். நிறைய பேர் விக் போடுங்கனு நடிக்கும்போது சொல்லும். ‘வேண்டாம் தெய்வமே, இந்த வெயில்ல விக் போட்டு நடிச்சா தாங்கமுடியுமா?’னு சொல்லிடுவேன்

Advertisement

Advertisement
Advertisement