சமீபகாலமாகவே சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றனர். வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்கள் மக்கள் மத்தியில் பாப்புலராகி வருகின்றனர்.அந்த வகையில் சின்னத்திரை ஹீரோயின்களில் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருப்பவர் நடிகை ஹிமா பிந்து. ஹிமா பிந்து ஆந்திராவை சேர்ந்தவர். இவர் பீகாம் முடித்துள்ளார். தாத்தா, பாட்டி, அப்பா என அனைவருமே சினிமாவில் பிரபலமானவர்கள் என்பதால் இவருக்கு இயல்பாகவே நடிப்பு மீது அதிக ஆர்வம் வந்துவிட்டது.
இவர் சிறு வயதிலிருந்தே ஆக்டிங்,டான்ஸ் என பல துறைகளில் ஆர்வம் காட்டி வருகின்றார். மேலும், இவருக்கு படிக்கும்போதே திரைப்படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால், பெற்றோர்கள் இவருக்கு ரெட் சிக்னல் கொடுத்து விட்டார்கள். பின் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு படத்தில் நடிப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இதையும் பாருங்க : சூப்பர் சிங்கர்ல குட்டி பொண்ணா வந்த ஜெசிகாவா இது ? என்ன இப்படி அடையாளம் தெரியாம மாறிட்டாங்க.
அதனால் இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதற்காக ஹிமா நடிக்க ஒப்பந்தம் சொன்னார். இவர் நடித்த முதல் படம் ’ஐ.ஆர் 8’. முதல் படத்திலே இவர் கதாநாயகியாக அறிமுகமானார். இதற்குப் பின் தான் இவர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் கலர்ஸ் தமிழில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மேலும், படையப்பா படத்தில் வரும் முதல் பாடலில் ரஜினியின் முகம் குழந்தையாக மாறும் ஒரு காட்சியில் வரும் குழந்தையும் இவர் தான். அதே போல் சிறு வயதில் இவர் விஜய் கையில் இருக்கும் புகைப்படம் ஒன்று கூட வைரலானது. இவரது வீட்டின் பக்கத்தில் தான் விஜய் நடித்த ‘பிரண்ட்ஸ்’ படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது தான் விஜய் அங்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஹீமா பிந்து.