தமிழ் சினிமா உலகில் காமெடியில் கிங்காக திகழ்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார். பின் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார். இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையேயான பிரச்சனை காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு விதித்தது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த பிரச்சனை தீர்ந்தது.
தற்போது இவர் Lyca நிறுவனத்துடன் பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். அதில் முதல் படமாக சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் லொகேஷன் பார்க்க லண்டன் சென்று திரும்பிய வடிவேலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வடிவேலுவின் குடும்பம் :
வடிவேலு சரோஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி என்ற மூன்று மகள்களும். சுப்பிரமணியன் என்ற ஒரே ஒரு மகனும் இருக்கிறார்கள். இவரது மகள் மற்றும் மகன் பற்றி எந்த ஒரு பெரிய தகவலும் இதுவரை கிடைத்தது கிடையாது. அதே போல இவர்கள் யாருமே எந்த ஒரு பேட்டியிலும் பங்கேற்றது கிடையாது.
வடிவேலு மகன் சுப்பிரமணி :
மேலும், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வடிவேலு தன் மகன் சுப்ரமணிக்கு திருமணம் செய்து வைத்தார். அவரது சொந்த ஊரில் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் உறவினர்களை வைத்து திருமணம் நடத்தினார். சுப்ரமணிக்கு பார்த்த பெண் புவனேஸ்வரி.மரவேலை செய்யும் ஒரு கூலி தொழிலாளி மகள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடிவேலு மகன் பேட்டி ஒன்றில் பங்கேற்றார்
நடிக்க வேண்டும் என்ற ஆசை :
அதில் பேசிய அவர், அதில் அவர் கூறியது, எனக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளார்கள். முதலில் ஒரு பெரிய பையன். இரண் டாவது ட்வின்ஸ் ஒரு பையன், ஒரு பொண்ணு மொத்தம் மூன்று பிள்ளைகள். இவர்களுக்கு எல்லாம் என் அப்பா வடிவேலு தான் பெயர் வைத்தார். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கு. ஆனால், இப்ப இல்லை கொஞ்ச நாள் கழித்து கண்டிப்பாக படத்தில் நடிப்பேன். அப்ப நிறைய சொல்லுவார் சினிமாவில் நடிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதற்காக நிறைய கடின உழைப்பு வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார். .
எதிர்கால திட்டம் :
அப்பாவுக்கு இப்போ தான் ரெட் கார்டு பிரச்சனை முடிந்தது. அவருடன் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. மேலும், நான் சென்னையில் கூத்துப்பட்டறையில் நடிப்பை கற்றுக்கொண்டு இருக்கிறேன். நடிப்பை தாண்டி எனக்கு எதாவது செய்ய வேண்டும் என்றால் Rssயில் இணைந்து சேவை செய்ய வேண்டும். பள்ளி படிக்கும் போதே Rssல் இருந்து இருக்கிறேன் என்னுடைய எதிர்கால திட்டம் பசங்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும். எனக்கு நல்ல வழி காட்டினால் நான் நல்லா வருவேன் என்று கூறியுள்ளார்.