சமீபத்தில் நாய் சேகர் படத்தின் படப்பிடிப்புகளுக்க்கு லொகேஷன் பார்ப்பதற்காக லண்டன் சென்று இந்தியா திருப்பிய வடிவேலு தற்போது மருத்துவமனையில் அனுமதிப்பட்டு இருக்கிறார் வடிவேலு. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக காமெடி நடிகராக வலம் வருபவர் வைகை புயல் வடிவேலு. இவர் எண்ணற்ற படங்களில் நகைச்சுவை நடிகராகவும், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து உள்ளார். அந்த வகையில் இவர் சங்கர் இயக்கத்தில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். ஆனால், வடிவேலுவுக்கும், சங்கருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக படம் நிறுத்தப்பட்டதது. இதனால் நடிகர் வடிவேல் மீது ரெட் கார்டு போடப்பட்டது.
பல ஆண்டு கழிதது ரீ – என்ட்ரி :
இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ தயாரிப்பார் சங்கருக்கு லைக்கா நிறுவனம் 5 கோடி கொடுத்து வடிவேலுவை தன் பக்கம் இழுத்து உள்ளார்கள். இதை தொடர்ந்து அடுத்த படத்தை லைக்கா நிறுவனத்துக்காக நடிக்க போகிறேன் என்றும் இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார் என்றும் இந்த படத்திற்கு நாய் சேகர் என்று தலைப்பு வைப்பதாகவும் கூறியிருந்தார் வடிவேலு.
நாய் சேகர் டைட்டில் பிரச்சனை :
இந்த நிலையில் வடிவேலு நடிக்கவிருக்கும் நாய் சேகர் படத்தின் டைட்டலில் சில பிரச்சனை ஏற்பட்டது. வடிவேலுவுக்கு முன்பாகவே அவசர அவசரமா ‘நாய் சேகர்’ டைட்டிலை வெளியிட்டார் காமெடிய நடிகர் சதிஷ். இதுகுறித்து பேசிய அவர், இந்த படத்தில் ஒரு நாயும் முக்கிய ரோலில் நடிக்கிறது அதனால்தான் இந்த குறிப்பிட்ட தலைப்பை வைத்தோம் இந்த படத்தின் சூட்டிங் எடுப்பதற்கு முன்பாக தெரிந்திருந்தால் கண்டிப்பாக இந்த டைட்டிலை கொடுத்திருப்போம் என்றும் கூறி இருந்தார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் :
ஆனால், வடிவேலுவோ நாய் சேகர் தலைப்பு தனக்கு தான் என்று கூறி இருந்தார். இருப்பினும் நாய் சேகர் என்ற டைட்டிலை வேறு விதத்தில் வைக்கலாம் என்று படக் குழு திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்புடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடிவேலு – சுராஜ் படத்தின் போஸ்டர் வெளியாகியது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜனவரியில் தூவுங்குவதாக இருந்தது.
லண்டன் பயணம் :
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் லொகேஷன் பார்க்க படக்குழுவினருடன் லண்டன் சென்றிருந்த வடிவேலு 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து சென்னை திரும்பி இருக்கின்றனர். அங்கிருந்து திரும்பி வரும் போது வழக்கமாக லண்டனிலிருந்து திரும்புபவர்களுக்கான உடல் பரிசோதனை நடந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருகிறது. ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
ஒமைக்ரான் பரிசோதனை முடிவுக்கு வைட்டிங் :
மேலும் அவரின் உடல் நலம் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து மருத்துவ கவனிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த கொரோனோ ஒமைக்ரான் வகையைச் சேர்ந்ததா என்று மேற்கொண்டு பரிசோதனை முடிவில் தெரியவரும் என்றும் வடிவேலு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வடிவேலு விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.