தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகர் நடிகைகள் சொகுசு கார்களை தான் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான பிரபலங்கள் Audi, Bmw என்று சொகுசு கார்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் நான்கு நபர்களிடம் தான் இருக்கிறது. அதில் விஜய்யும் ஒருவர். அஜித் பைக் பிரியர் என்றால் விஜய் ஒரு கார் பிரியர், இவரிடத்தில் ஏகப்பட்ட கார் கலெக்ஷன் இருக்கிறது. அந்த வகையில் விஜயிடம் இருக்கும் விலை அதிகமான காரில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்.
தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் இயக்குனர் ஷங்கரிடம் மட்டும் தான் இந்த கார் இருக்கிறது. அதே போல இந்தியாவில் சஞ்சய் தத், அமிதாப் பச்சன் போன்ற ஒரு சிலர் பிரபலங்களிடம் மட்டுமே இந்த ரோல்ஸ் ராய் கார் இருக்கிறது. இந்த காரின் ஆரம்ப விலை 5 கோடியில் இருந்து துவங்கினாலும் பணம் இருப்பவர்கள் எல்லாராலும் இந்த காரை வாங்க முடியாது, இந்த காரை வாங்குபவர்களின் செல்வாக்கு, புகழ் போன்ற அனைத்தையும் ஆராய்ந்து தான் இந்த காரை விற்க சம்மதிப்பார்கள் என்று கூட ஒரு செய்தி பல ஆண்டுகளாக இருக்கிறது.
இதையும் பாருங்க : வலிமை படத்தில் அஜித் பயன்படுத்தும் பைக் பற்றி தெரியுமா ? அத ஓட்றதுக்கு இத்தனை தகுதி வேணுமா ?
ஆனால், இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அவ்வளவு ஏன் , பிரபல பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத்திடம் பல கார்கள் இருந்தாலும் ரோல்ஸ் ராய் காரை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அவர் ரோல்ஸ் ராய் காரை வாங்க விருப்பம் தெரிவித்த போது ரோல்ஸ் ராய் நிறுவனம் அவரது விருப்பத்தை நிராகரித்து விட்டதாக கூட செய்திகள் வெளியானது.
ரோல்ஸ் ராய்ஸ் கார் பல்வேரு படங்களில் வந்து இருக்கும். அந்த வகையில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘வை ராஜா வை’ படத்தின் கிளைமாக்ஸ்சில் கொக்கி குமராக தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்குவர். அந்த கார் வேறு யாருடையதும் இல்லை தனுஷுடையது தான். நடிகர் தனுஷ் 2015 ஆம் ஆண்டு இந்த காரை வாங்கினார். முக்கியமான விசேஷங்களுக்கு மட்டும் தான் இந்த காரை தனுஷ் பயன்படுத்துவர்.