தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் வைபவ். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் தான் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இந்த படத்தை விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் இயக்கி இருக்கிறார்கள். இந்த படத்தில் அதுல்யா, ஆனந்தராஜ், ஜான்விஜய், சுனில் ரெடின் கிங்ஸ்லி, லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு டாமி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பாபி பாலச்சந்திரன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் லிவிங்ஸ்டன் ரவுடியாக இருக்கிறார். இவரிடம் அடியாட்களாக தான் ஹீரோ வைபவ் மற்றும் மணிகண்டன் வேலை செய்கிறார்கள். இவர்கள் ஒரு போலியான கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். அப்போது அந்த பணத்தை தொலைத்து விடுகிறார்கள். இவர்கள் தொலைத்த பணத்தை சரியான நேரத்தில் கொடுக்காவிட்டால் லிவிங்ஸ்டன் குடும்பத்திற்கு பெரிய பிரச்சனையே ஏற்படும். அதோடு லிவிங்ஸ்டன் மகள் தான் அதுல்யா ரவி.
இவரை ஒன்சைடாக வைபவ் காதலிக்கிறார். இதனாலே அவர் அந்த பணத்தை எப்படியாவது திருப்பி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக இவர் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி ஆகியரோடு கூட்டணியும் சேர்கிறார். இவர்கள் எல்லோருமே சேர்ந்து ஒரு வங்கியை கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார்கள். கடைசியில் அவர்களுடைய எண்ணம் நிறைவேறியதா? வைபவ் வெற்றி பெற்றாரா? தொலைந்த பணம் கிடைத்ததா? இல்லையா? அதுல்யாவிடம் தன்னுடைய காதலை வைபவ் சொன்னாரா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து காமெடியாக இயக்குனர் இந்த படத்தை எடுத்துச் சென்றிருக்கிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் தான் பயங்கரமான காமெடியாக இருக்கிறது. ஒரு என்டர்டைன்மென்ட் படமாக குடும்பத்தோடு ஜாலியாக எல்லோரும் சேர்ந்து பார்க்கும் வகையில் காட்சிகளை இயக்குனர் சிறப்பாக காண்பித்து இருக்கிறார். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இயக்குனர் சிரிப்பலையில் கொண்டு சென்றிருக்கிறார். லவ், சோகம், ஏக்கம், ஆக்சன் என்று அனைத்திலுமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சில காட்சிகள் எல்லாம் வியக்க வைக்கும் அளவில் இயக்குனர் கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்கள் வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை சொல்லி, அதை காமெடி வடிவில் இயக்குனர் சொல்லி இருக்கிறார். ஆனால், படம் முழுக்க நடிகர்கள் இருப்பது தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. எந்த நடிகர் எந்த கதாபாத்திரம் என்று நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு இருக்கிறது.

படத்தில் நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். ஒரு சாதாரண வங்கி கொள்ளை கதையைத்தான் இயக்குனர் காமெடியில் கொடுத்திருக்கிறார். மேக்கிங், ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கதையில் விறுவிறுப்பையும் சுறுசுறுப்பையும் கொடுத்திருந்தால் படம் வேற லெவலில் சென்றிருக்கும். மொத்தத்தில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் சுமாரான படமாக இருக்கிறது.
நிறை:
நடிகர்களின் நடிப்பு
கதைக்களம்
முழுக்க முழுக்க காமெடி கான்செப்ட்
ஒளிப்பதிவு, எடிட்டிங் நன்றாக இருக்கிறது
இரண்டாம் பாதி ஓகே

குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறது
கதைக்களம் கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்திருக்கலாம்
மொத்தத்தில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் - சிரிப்பலை






