அந்த ஒரு பாட்டால் எங்கள் வாழ்க்கை மாறியது – ‘வைதேகி காத்திருந்தாள்’ பிரமிளா சொன்ன விஷயம்

0
46
- Advertisement -

இந்திய சினிமாக்கள் உலகில் புகழ்பெற்ற பாடகராக இருந்தவர் ஜெயச்சந்திரன். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் பாடியிருக்கிறார். இவருடைய படலுக்காக பல விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

என்பது காலகட்டம் நடிகர் தொடங்கி தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களுடனும் ஜெயச்சந்திரன் பயணித்திருக்கிறார். அதேபோல எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ ஆர் ரகுமான் என பல இசையமைப்பாளர்களின் இசையிலும் ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நேற்று இவர் உடல்நல குறைவின் காரணமாக காலம் ஆனார். இவருடைய இறுதி சடங்குகள் நாளை நடக்கிறது.

- Advertisement -

ஜெயச்சந்திரன் மறைவு:

இவரின் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெயச்சந்திரனின் மலரும் நினைவுகளை குறித்து வைதேகி காத்திருந்தாள் படத்தில் விஜயகாந்தின் முறைப் பெண்ணாக வைதேகி ரோலில் நடித்திருந்த பிரமிளா பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். இவர் வேறு யாரும் இல்லை நடிகை மேக்னா ராஜ் உடைய அம்மா. தற்போது இவர் தன்னுடைய கணவருடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.

மேக்னா ராஜின் அம்மா-அப்பா பேட்டி:

மேக்னா ராஜின் தந்தையுமே ஒரு இயக்குனர் ஆவார். இவர் சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய படங்களிலும் ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேக்னா ராஜின் தாய், தந்தை அளித்த பேட்டியில், கிராமத்து அத்தியாயம் படம் 85 ல் வெளியானது. அந்த பட வாய்ப்பு எனக்கு கமலஹாசன் சிபாரிசால் தான் கிடைத்தது. ஊதக்காத்து வீசயிலே என்ற பாடலை ஜெயச்சந்திரன் தான் பாடியிருந்தார். அந்தப் பாட்டு இப்ப கேட்டாலுமே எல்லோருக்கும் பிடிக்கும் .

-விளம்பரம்-

ஜெயச்சந்திரன் பாடல்கள்:

அந்த சமயத்தில் எனக்கு ஜெயச்சந்திரன் பற்றி பெரிதாக தெரியாது. ஆனால், அவர் பாட்டு எனக்கு ரொம்பவே பிடிக்கும். நாலு வருடம் கழித்து என்னுடைய மனைவி பிரமிளா நடித்த வைதேகி காத்திருந்தாள் படம் வெளியானது. அதில் ‘ராசாத்தி உன்னை’ பாட்டை பாடி இருந்தார். அந்த பாட்டு பிரமிளாவிற்கு தமிழில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தமிழில் அந்த படத்துக்கு பிறகு பெரிதாக அவர் நடிக்கவில்லை என்றாலும் அந்த ஒரு பாட்டு இன்றும் தமிழ்நாட்டில் பேசப்பட்டிருக்கிறது. அவருக்கான அடையாளத்தை உருவாக்கி கொடுத்தது ஜெயச்சந்திரன் தான்.

ஜெயச்சந்திரன் பற்றி சொன்னது:

எங்க வீட்டில் இந்த இரண்டு படங்களின் பாடல்கள் ஒலிக்காத நாளில்லை. இந்த பாட்டு வெளிவந்த பிறகு கன்னடத்தில் அவர் பாடிய பாடல்களையும் தேடி இருந்தோம். சமீபத்தில் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கார் என்று கேள்விப்பட்டோம். அவர் குணமாகி விடுவார் என்றெல்லாம் வேண்டிக் கொண்டோம். ஆனால், காலம் அவரை அழைத்துக்கொண்டது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

Advertisement