“சாகும்முன் அனைவரும் பார்க்கவேண்டும்” – படத்தை பாராட்டி வைரமுத்து போட்ட பதிவு. ரசிகர்களின் கமெண்ட்ஸ்.

0
400
vairamuthu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று பலரும் சந்தேகித்தும் வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் கவிஞர் வைரமுத்து எது செய்தாலும் அவரை குறித்து சின்மயி விமர்சித்துப் பேசி வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : அமரர் கல்கியின் குடும்பத்தினர்களை கெளரவப்படுத்திய பொன்னியின் செல்வன் படக்குழு.

மேலும், சின்மயினால் தான் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்துவை சேர்க்கவில்லை என்ற ஒரு கிசுகிசுவும் எழுந்தது. இதுகுறித்து மணிரத்தினத்திடம் ஒரு பிரஸ் மீட்டில் கேட்கப்பட்டபோது வைரமுத்து உடன் இணைந்து பல திரைப்படங்கள் பணியாற்றி விட்டோம். புதிய திறமையாளர்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த முடிவு என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

வைரமுத்துவின் பாடல் வரிகள் இல்லாமல் வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதிலும் குறிப்பாக ‘பொன்னி நதி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது. மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் சாதனையும் செய்து வருகிறது.

இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், இத்தனை ஆண்டுகள் மணிரத்தினத்துடன் பணியாற்றிய வைரமுத்து இந்த படம் குறித்து எந்த ஒரு பதிவையும் பதிவிடவில்லை. இப்படி ஒரு நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட  ‘புளோன்ட்’ என்ற படத்தை பாராட்டி வைரமுத்து ட்வீட் போட்டு இருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள பதிவில் ‘சாமானியன் முதல் ஜனாதிபதி வரை உடல் சுரண்டலுக்கு உட்பட்ட நடிகை தூக்க மாத்திரை தின்று துக்கத்தில் மரிக்கிறாள் மர்லின் மன்றோவின் சாவில்கூட ஒரு செளந்தர்யம் பாவம் புகழின் கீழே ரத்தம் “BLONDE” – வலிக்கிறது படம் எல்லாரும் சாகும்முன் ஒருமுறை.’ என்று குறிப்பிட்டுள்ளார். வைரமுத்துவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் பொன்னியின் செல்வன் குறித்து எதாவது சொல்லுங்க என்று கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

Advertisement