எல்லா இடத்திலும் இது தேவை-ஹேமா கமிட்டி பற்றிய கேள்விக்கு வைரமுத்து சொன்ன பதில்

0
245
- Advertisement -

ஹேமா கமிட்டி குறித்து கவிஞர் வைரமுத்து அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.

-விளம்பரம்-

பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். அதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை உடன் ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

ஹேமா கமிட்டி அறிக்கை:

அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து கேரள சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதோடு இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகரும், அம்மா அமைப்பின் முன்னாள் தலைவருமான மோகன்லால் விளக்கம் கொடுத்தார்.

பிரபலங்கள் புகார்:

இதை அடுத்து பல நடிகைகள் பிரபலங்கள் மீது புகார் கொடுத்து வருகிறார்கள். இந்த புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதோட சம்பந்தப்பட்ட நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இது மிகப்பெரிய அளவில் இந்திய திரை உலகில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தமிழ் திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க நடிகை ரோகினி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

வைரமுத்து பேட்டி:

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கவிஞர் வைரமுத்து, ஹேமா கமிட்டி என்பது எல்லா மாநிலங்களிலும் முக்கியமான துறைகளில் அமைக்கப்பட வேண்டிய ஒரு அமைப்பு. திரைத்துறையில் மட்டுமில்லாமல் நாட்டில் உள்ள எல்லா துறைகளிலுமே பெண்கள் பாதுகாப்பை தேடுகிறார்கள். அதோடு பெண்கள் சுரண்டப்படுகிறார்கள். அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

ஹேமா கமிட்டி குறித்து சொன்னது:

அதிலிருந்து முற்றும் விடுபட வேண்டுமென்றால் பெண்மையில் இருக்கிற பெண்மை என்ற ஒரு கருத்தை நீங்கள் நீக்கிட வேண்டும். ஆணுக்கு ஆண்மை என்றும், பெண்ணுக்கு பெண்மை என்று பிரித்து தான் நாட்டில் பேதங்கள் ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறேன். ஆணும், பெண்ணும் சரி சமம் தான். இதில் யார் யாரையும் துன்புறுத்துவது என்பது ஒரு பாலின பலவீனமானது. இந்திய பள்ளிக்கல்வித்துறைக்கு ஒரு கோரிக்கை, பெண்களுக்கு கூடுதலான பாதுகாப்பிற்கான பயிற்சியை கல்வித் திட்டத்தில் சேருங்கள். பெண்களுக்கு விளையாட்டு பயிற்சி, எழுத்து பயிற்சி பத்தாது. பெண் குழந்தைகள் தங்களை தாங்களே காத்துக் கொள்கின்ற உடல் வலிமையும் ஊட்டச்சத்தும் தேவை. அவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு தொடக்கமாக இந்த ஹேமா கமிட்டியை நான் பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement