‘கலைஞர்களுக்கு வயசானாலே’ – இளையராஜா குறித்து பேசிய வைரமுத்து

0
818
- Advertisement -

இளையராஜா குறித்து வைரமுத்து கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான ஒளிப்பதிவாளர், இயக்குனராக பணியாற்றியவர் தங்கர் பச்சான். இவர் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர். மேலும், தங்கர் பச்சான் அவர்கள் அழகி, சொல்ல மறந்தகதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் என பல திரைப்படங்களை இயக்கியும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் பார்த்திபன், சேரன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இவருடைய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இவர் எப்பவுமே எதார்த்தமான கிராமப்புற கதைகளை மையமாக கொண்டு தான் படம் இயக்குவார். இடையில் சிறிது காலம் இவர் எந்த படங்களையும் இயக்காமல் இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கர் பச்சான் அவர்கள் கருமேகங்கள் கலைகிறது என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

தங்கர் பச்சான் இயக்கிய படம்:

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஸ் இசை அமைத்திருக்கிறார். மேலும், இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதி இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் தங்கர்பச்சான், கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் எஸ் ஏ சந்திரசேகர், கௌதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கனகராஜ், நடிகர் யோகி பாபு உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

விழாவில் வைரமுத்து சொன்னது:

இந்நிலையில் விழாவில் இளையராஜா குறித்து வைரமுத்து கூறியிருந்தது, இவருடைய இசை இன்னும் தீர்ந்து போகவில்லை. இன்னும் பழையதாகவும் இல்லை. நம் திரையுலகம் அவரது பணியை வாங்கி வைத்துக் கொள்ளாமல் ஏன் தூங்கி நிற்கிறது என்று எனக்கு தெரியவில்லை. சொல்லப்போனால், கலைஞர்களுக்கு வயது ஆகத்தான் முதிர்ச்சி கூடி வரும். கலையில் ஒரு தெளிவு வரும். தீர்க்கமும் திட்டமும் வரும். நடிகர்களுக்கு வயதானால் அவர்களுடைய சந்தை சரியும்.

-விளம்பரம்-

இளையராஜா குறித்து சொன்னது:

ஆனால், கலைஞர்களுக்கு வயதானால் அவர்களுடைய சந்தை பெருக வேண்டும். ஏன் பெருகவில்லை என தெரியவில்லை. மிகச்சிறந்த இயக்குனர்களும் இவரை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். அதோடு இவரின் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம்.

இளையராஜா குறித்த தகவல்:

அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர் இளையராஜா. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.

Advertisement