அமைச்சரவையில் இடம்பெற்ற போது நீர் வளத்துறைய கேட்டு வாங்கி காவேரி பிரச்சனைய முடிச்சி இருக்க வேண்டியது தான் – ஜெயலலிதாவின் கேள்விக்கு கலைஞர் சொன்ன பதில்.

0
618
Vairamuthu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். இவர் இதுவரை 5800 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவர் திரை உலகில் முதலில் இளையராஜாவுடன் பிறகு ஏ ஆர் ரகுமான் இணைந்து பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருந்தார்கள். இது ஒரு பக்கமிருக்க, வைரமுத்து அவர்கள் திராவிடத்தின் மீது அதிக பற்று கொண்டவர். இதனாலேயே இவர் கலைஞரின் தீவிர ரசிகர் என்று சொல்லலாம். மேலும், கலைஞருக்காக இவர் பாடல்களை எல்லாம் எழுதி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் கலைஞருக்காக பல விழாக்களையும் வைரமுத்து நடத்தி இருக்கிறார். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விழாவில் வைரமுத்து அவர்கள் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி குறித்து சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

- Advertisement -

ஜெயலலிதா மற்றும் கலைஞர் குறித்து வைரமுத்து கூறியது:

ஜெயலலிதா அம்மா முதல்வராக ஆட்சியில் இருக்கும்போது கலைஞரை பார்த்து ஒரு கேள்வி கேட்டார். அது, நீங்கள் மத்திய பாராளுமன்றத்தில் சட்டசபையில் இருக்கும் போது காவிரி நீர் பிரச்சினையை நீர்வளத்துறை அமைச்சர் மூலமாக பேசி தீர்த்து வைத்து இருக்கலாமே? என்று கேட்டிருக்கிறார். அதற்கு கலைஞர் அவர்கள், எந்த இரு மாநிலங்களுக்கு இடையில் நீர் பிரச்சனை இருக்கிறதோ, அந்த மாநிலத்தில் நீர்வளத்துறை அமைச்சர் சுதந்திர இந்தியாவில் கிடையாது என்று சொன்னவுடன் அனைவருமே அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். உடனே ஜெயலலிதா அம்மா, எனக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் நீர்வளத்துறை அமைச்சர்கள் பட்டியல் வரவேண்டும் என்று உத்தரவிட்டார்.

கருணாதி சொன்ன பதில்:

பின் எல்லோரும் அவசர அவசரமாக நீர்வளத்துறை அமைச்சர்கள் பட்டியல் தேடினார்கள். அப்போது அவர்கள் கலைஞர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். இதை ஏன் ஜெயலலிதா அவர்கள் தேட சொல்கிறார் என்று சொல்லி இருந்தார்கள். பின் மாலை வரை அனைவரும் ஆராய்ந்தார்கள். பிறகு கடைசியில் எந்த இரு மாநிலங்களுக்கு இடையில் நீர் பிரச்சனை இருக்கிறதோ, அந்த மாநிலத்தில் நீர்வளத்துறை அமைச்சர் இல்லை என்பதை ஜெயலலிதா அம்மாவுக்கு தெரியவந்தது. பிறகு கலைஞர் சொல்வது உண்மை என்று உணர்ந்தார். இப்படி கலைஞர் சொல்லிய சொல்லும் செயலும் என்றைக்கும் நேர்மை கண்ணியம் இருக்கும் என்று கலைஞரை புகழ்ந்து பேசி இருந்தார் வைரமுத்து.

-விளம்பரம்-

ஜெயலலிதா பற்றிய தகவல்:

தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், மறைந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி அவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள். ஜெயலலிதா அவர்கள் திரைப்பட நடிகையாக இருந்தாலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புரட்சித்தலைவர். இவரை அம்மா என்றுதான் அனைவரும் ஆதரித்தார்கள். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர். இருந்தாலும் இவர் தமிழக முதலமைச்சராக 5 முறை பதவி வகித்திருக்கிறார். பின் இவர் உடல்நிலை சரியில்லாமல் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார். அதேபோல் கலைஞர் கருணாநிதி அவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்.

கலைஞர் கருணாநிதி பற்றிய தகவல்:

இவர் கவிதைகள் எழுதுவது, சினிமா துறையிலும் பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்திருக்கிறார். அதோடு தூக்கு மேடை நாடகத்தின் போது எம் ஆர் ராதா இவருக்கு கலைஞர் என்ற பட்டம் அளித்தார். அப்போதிலிருந்தே இவரை அனைவரும் கலைஞர் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இவரும் உடல்நலக்குறைவு காரணமாக 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தன்னுடைய 94 வயதில் காலமானார். இந்த இரு தலைவர்களின் இழப்பு தமிழகத்தில் ஈடுகட்ட முடியாத ஒன்று. இவர்கள் இல்லை என்றாலும் இவர்களுடைய புகழ் என்றென்றும் தமிழகத்தில் ஓங்கிக் கொண்டு தான் இருக்கிறது.

Advertisement