பெண்ணை திருப்தி செய்ய முடியாதவன் – தாம்பத்திய உறவு குறித்து வைரமுத்து அளித்திருக்கும் பேட்டி

0
376
vairamuthu
- Advertisement -

தாம்பத்திய உறவு குறித்து வைரமுத்து அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-
Vairamuthu

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றம் சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும், பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். இன்னொரு பக்கம், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் இருக்கிறார்கள். ஆனால், இதை எல்லாம் வைரமுத்து கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.

- Advertisement -

வைரமுத்து திரைப்பயணம்:

தற்போது வைரமுத்து அவர்கள் ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் 2 படத்திலும், பாலா இயக்கும் வணங்கான் படத்திலும் பாடல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இது மட்டும் இல்லாமல் சில படங்களிலும் வைரமுத்து கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் வைரமுத்து பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நம்முடைய வாழ்க்கை எந்த மாதிரியான சுற்றுச்சூழலில் வளர்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஏழு நட்சத்திர ஹோட்டல்களில் என்னை வெளிநாட்டு நண்பர்கள் தங்க வைத்திருக்கிறார்கள். அங்கு நிறைய பழங்கள், குளிர்பானங்கள், மது பாட்டில்கள் எல்லாம் இருக்கும்.

வைரமுத்து பேட்டி:

குறிப்பாக, அதிக விலை உயர்ந்த மதுபானங்கள் இருக்கும். அதை நான் பார்த்து அதனுடைய நிறங்களை வேறுபடுத்தி பார்ப்பேன். அதுதான் எனக்கும் மதுவிற்கும் இடையே ஆன உறவு. காரணம், சிறு வயதில் இருந்தே மதுவால் அழிந்த குடும்பங்களையும், மனிதர்களையும் நான் பார்த்து வளர்ந்து இருக்கிறேன். அவர்கள் படும் அவமானங்கள், குடும்பத்தில் ஏற்படுகிற குழப்பங்கள், பிரச்சனைகள் எல்லாம் பார்த்திருக்கிறேன். நீங்கள் போதை பழக்கத்தில் இருந்து வெளியேறாவிட்டால் உங்களுடைய இல்லற வாழ்க்கை கூட பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவர்கள் நிறைய சொல்லி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தாம்பத்திய உறவு குறித்து சொன்னது:

உங்களை நம்பி வரும் பெண்ணை நீங்கள் முழுமை செய்யாதவனாக இருப்பீர்கள் என்றால் அவளுக்கு நீங்கள் துரோகம் செய்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு பெண்ணை நிறைவு, முழுமை செய்வதும் அவளை மதிக்கின்ற ஒன்று. மனைவிக்கு மலர்களை வாங்கி தருவது, தங்கம் வாங்கி தருவது, இனிப்பு வாங்கி தருவது மட்டும் ஒரு கணவனுடைய செயல் இல்லை. உங்களிடம் அவள் என்ன எதிர்பார்க்கலாம் என்பது உங்களுக்கு தெரியும். அதை நீங்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அதற்கு போதை பழக்கத்தை விட்டு தயவு செய்து வெளியேறுங்கள்.

வைரமுத்து அறிவுரை:

நிகழ்கால தாம்பத்தியத்தை அது பாதிக்க விட்டாலும் எதிர்கால தாம்பத்தியத்தை அது கண்டிப்பாக பாதிக்கும். மனைவிக்கு தாம்பத்தியம் குறைப்பட்டு போனால் வாழ்க்கையில் ஒரு குறை வரும். இந்த குறை உங்களை எந்தெந்த துன்பங்களுக்கு கொண்டு செல்லும் என்பது உங்களுக்கே தெரியாது. சில ஆண்கள் மற்றும் பெண்களின் வாக்குமூலங்களை கேட்டு சில துயரங்களை நான் உணர்ந்திருக்கிறேன். அந்த பிரச்சனைக்குள் புதிய தலைமுறைகள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

Advertisement