இளையராஜாவை தொடர்ந்து வைரமுத்துவும் பா.ஜ.கவில் இணைகிறாரா ? கேள்வி எழுப்ப காரணமாக இருந்த விஷயம்.

0
224
vairamuthu
- Advertisement -

மோடியின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பங்கேற்றது குறித்து வைரமுத்து அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா பாடலின் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்.

-விளம்பரம்-
ilayaraja

மேலும், இவர் இதுவரை 5800 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவர் திரை உலகில் முதலில் இளையராஜாவுடன் பிறகு ஏ ஆர் ரகுமான் உடன் இணைந்து பாடல்களை எழுதி இருக்கிறார். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘பார்த்திபன் சாருக்கு நன்றியோடு இருப்பேன்’ – தான் நடித்த முதல் படத்திற்கு கிடைத்த Response. கண்ணீர் வடித்த பவி டீச்சர்.

வைரமுத்து குறித்த தகவல்:

பிறகு வைரமுத்து பலருக்கும் பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருந்தார்கள். ஆனால், உண்மையில் பாடகி சின்மயி கூறும் இந்த குற்றச்சாட்டு உண்மை இருக்கிறதா என்று பலரும் சந்தேகித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து எது செய்தாலும் அவரை குறித்து சின்மயி விமர்சித்துப் பேசி வருகிறார். இருந்தாலும், வைரமுத்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வாஜ்பாய் மற்றும் மோடியின் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு நிகழ்ச்சியில் வைரமுத்து பங்கேற்றிருந்தார்.

-விளம்பரம்-

வைரமுத்து அளித்த பேட்டி:

அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். 4 ஆண்டுகளுக்கு முன்பு மோடியின் கவிதைத் தொகுப்பான சிந்தனைக் களஞ்சியம் வெளியீட்டு நிகழ்ச்சியில் வைரமுத்து பங்கேற்றார். இது அரசியல் ரீதியாக பயங்கர சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தனது கவிதைத் தொகுப்பை வெளியிடுவதற்கு என்னை அவரது இல்லத்திற்கு அழைத்து இருந்தார். பிரதமர் இல்லத்தில் வெளியீட்டு விழா நடைபெற்றது. நீங்கள் விரும்பினால் முன்னாள் பிரதமராக முடியும்.

பாஜக – திமுக கூட்டணி:

ஆனால், முன்னாள் கவிஞராக என்றைக்கும் வாழ முடியாது என்று அவரிடம் சொன்னேன். இதைக் கேட்டு சிரித்த அவர் என் மீது அதிக பாசம் வைத்தார். அப்போது வாஜ்பாய் உடன் கலைஞர் கூட்டணியில் இருந்தார். பாஜகவும், திமுகவும் கூட்டணியில் இருந்த காலம். அதனால் நான் வாஜ்பாய் நிகழ்ச்சியில் பங்கேற்றதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், மோடி அவர்களுடைய கவிதைத் தொகுப்பின் தமிழ் தொகுதியை வெளியிட்ட போது திமுக கூட்டணியில் பாஜக இல்லை. அப்போது, வாஜ்பாயோடு நீங்கள் மோடியை ஒப்பிடக் கூடாது என்று சிலர் தமிழ் தீவிரவாதிகள் என்னிடம் வந்து சொன்னார்கள்.

நிர்மலா சீதாராமன் சொன்னது:

நிர்மலா சீதாராமன் அவர்கள் மோடியின் கவிதைத் தொகுதியை வெளியிட வேண்டும் என்று என்னிடம் கேட்டபோது நான் வருகிறேன் என்று அவரிடம் சொன்னேன். சர்ச்சைக்கு இடமில்லாத கருத்துக்கள் கவிதை தொகுப்பில் இருந்தால் நான் வருகிறேன் என்று அவரிடம் கூறினேன். பின் கவிதை தொகுப்பை வாங்கி படித்த போது கவிதைகள் நன்றாக இருந்தன. எந்தவிதமான மதவாதமும் இல்லை. வாஜ்பாயின் கவிதைகளை வெளியிட்ட வைரமுத்துவே, நம்முடைய கவிதைகளை வெளியிடட்டும் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும். அரசியலில் மொழியும், மொழியில் அரசியலும் கலந்து இருந்தால் நாம் தள்ளித்தான் இருக்க வேண்டும் என்று கூறினார்.

Advertisement