என்னை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார்..! முழு ஆபாச Whatsapp பதிவை வெளியிட்ட பெண்.!

0
1197
Vairamuthu

சினிமாவில் பாலியல் தொந்தரவுக்கு நடிகைகள் மட்டுமல்ல சில பெண் கலைஞர்களும் உள்ளாகியுள்ளனர். அந்த வகையில் பெயர் தெரியாத இளம் பெண் கவிஞர் ஒருவர் தமிழ் சினிமாவின் பிரபல கவிஞரான வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் பாடகி சின்மயி பெண்களுக்கான பாலியல் தொல்லை குறித்து பேசினார். இதை தொடர்ந்து பல்வேறு நபர்களும் தங்களுக்கு சினிமா துறையில் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி வந்த நிலையில் பெயர் தெரியதா பெண் ஒருவர் பிரபல பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் என்பவருக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பி இருந்தார்.

- Advertisement -

அந்த மெசேஜில் தனக்கு 18 வயதாக இருந்த போது பிரபல கவிஞர் வைரமுத்து விடம் பணிபுரிந்ததாகவும் அப்போது அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும் அந்த பெண் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அதே பெண் பிரபல பின்னணி பாடகி சின்மைக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

chin

-விளம்பரம்-

chinmaiyi

chinmayi

அதில் வைரமுத்துவுடன் நான் பெசன்ட் நகர் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது அவர் எனக்கு மோர் கொடுத்ததாகவும், அப்போது எனது உதட்டில் மோர் ஓடியுள்ளது என்று கூறி அருகில் வந்து உதட்டில் முத்தமிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த விடயம் எனது நண்பர்களுக்கும், உடன் பணிபுரியும் பாடகர்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.

இந்த விடயம் தனது கணவருக்கு தெரியாது அவருக்கு தெரிந்தால் எனது கேரியர் பாழாகிவிடும் எனவே எனது பெயரை குறிப்பிடாமல் இந்த விடயத்தை பகிருங்கள் என்று அந்த பெண் பாடகி சின்மையிடம் மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த மெசேஜ்ஜின் ஸ்கிறீன் ஷாட்களை பாடகி சின்மை தனது சமூக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement