முதன் முறையாக தன் மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு வாய்திறந்த வைரமுத்து ..!

0
1136
- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்த பிறகு பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மிகவும் வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வகையில் பிரபல தமிழ் திரைப்பட கவிஞர் வைரமுத்து மீது எழுந்துள்ள பாலியல் புகார்கள் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

-விளம்பரம்-

Vairamuthu

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெயர் வெளியிட விரும்பாத பெண் பாடகி ஒருவர் கவிஞ்ர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ட்விட்டர் பக்கத்தில் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரபல பின்ணணி பாடகி சின்மையும் #metoo என்ற ஹேஸ்டேக் மூலம் பாலியல் ரீதியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவுதெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மேலும் சில பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார்களை கூற நடிகை வரலக்ஷ்மி, சமந்தா போன்ற நடிகைகளும் #metoo குழுவிற்கு ஆதரவு தெரிவித்தன. இதனால் கவிஞர் வைரமுத்துவிற்கு பல எதிர்ப்புகளிக்கிளம்பியது. இதுநாள் வரை இதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்த கவிஞர் வைரமுத்து, தற்போதுமுதன் முறையாக தன மீதான குற்றச்சாட்டு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

-விளம்பரம்-

அதில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement