கவிஞர் வைரமுத்துவிற்கு கேரளாவின் மிக உயரிய விருதான ஓஎன்வி இலக்கிய விருது வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. இருப்பினும் வைரமுத்துவிற்கு இந்த விருது கிடைத்ததற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சரை ஸ்டாலின் வைரமுத்துவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் கவிஞர் வைரமுத்து. ஆனால், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு இந்த விருதை வழங்கக்கூடாது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதில் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்த சினமயி சும்மா இருப்பாரா. வைரமுத்துவை ஸ்டாலின் சந்தித்த புகைப்படத்தை போட்டு வாவ் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு நடிகையும் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான காஜல், சின்மயின் திருமணத்தில் வைரமுத்து கலந்துகொன்டு வாழ்த்திய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து வாவ் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ரசிகர் ஒருவர், சின்மயி, வைரமுத்து காலில் விழுந்து ஆசி வாங்கும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
இதையும் பாருங்க : சன் ரைஸ் விளம்பரத்தில் குடும்ப குத்துவிளக்காக வரும் நடிகை – நீச்சல் உடையில் கொடுத்த போஸ்.
சின்மயி, தனது திருமணத்திற்கு முன்பாக தான் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்க சின்மயி திருமணத்திற்கு வைரமுத்து அழைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியும் நிலவி வருகிறது. அந்த வகையில் இதுகுறித்து ரசிகர் ஒருவர், சின்மயியை ‘பொண்ணு கிட்ட தப்பா நடந்த ஒருத்தன கல்யாணத்துக்கு கூப்டு கால்ல விழ சொன்னா ஒங்கதாத்தால விட பெரிய மாமா உலகத்துல யாராச்சும் இருக்க முடியுமான்னு சொல்லிட்டு போங்க டோலி’ என்று கடுமையாக சாடி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த சின்மயி, அந்த ஆள கூப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணதே அவர் மகன்தான் உன்ன போல பெரிய ஆள்தான் மாமா அவரும் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான் என்னிடம் தவறாக நடந்த சொன்னேன் அப்புறமும் அப்பாவை கல்யாணத்துக்கு கூப்பிட்டு என்று சொல்லக்கூடிய ஆல் என்று குறி இருந்தார்
சின்மயியின் இந்த குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்துள்ள மதன் கார்க்கி, இது மற்றொரு பொய் அவரேதான் என்னுடைய அப்பாவை அவரது திருமணத்திற்கு அழைக்க விரும்பினார் ஆனால் அவர் மீது இருந்த வெறுப்பால் அப்பா அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கவில்லை. அதனால் என்னிடம் அப்பாயின்மென்ட் வாங்கி தர சொல்லி கேட்டதால் நானும் அவருக்கு வாங்கி கொடுத்தேன். அவர் தனியாக அவரது வீட்டிற்கு சென்று அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி அவரை அழைத்து இருந்தார்.
அதேபோல மதன் கார்க்கி சின்மயி ஏன் வைரமுத்துவை தனது திருமணத்திற்கு அழைத்தார் என்று ஏற்கனவே பதிலளித்த ஸ்கிரீன் ஷாட் ஒன்றை ரீட்வீட் செய்துள்ளார். அதில் பதில் அளித்திருக்கும் சின்மை என்னுடைய திருமணத்திற்கான அழைப்பிதழ்களை பிஆர்ஓ தான் கையாண்டார்கள் அவர்கள்தான் அனைவரையும் திருமணத்திற்கு அழைத்தார்கள் இப்படித்தான் எங்கள் அனைவருக்கும் நடக்கிறது என்று கூறியிருக்கிறார்.