சின்மயி-வைரமுத்து சர்ச்சை..!சின்மயிக்கு ஆதரவாக பேசிய வைரமுத்துவின் மகன்..!உண்மை என்ன?

0
445
Karki

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.

Mathan karki

அதே போல நடிகை சின்மையின் இந்த பிரச்சனைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் வைரமுத்துவின் மகனும் கவிஞ்சருமான மதன் கார்கியும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்த்தாக நேற்றிலிருந்து ஒரு செய்தி தீயாக பரவி வந்தது. கார்க்கி பதிவிட்டுள்ள அந்த டீவீட்டில், சின்மயி உங்கள் தைரியத்தை பாராட்டுகின்றேன். நீங்கள் சரியானதை செய்கிறீர்கள் உங்களுடன் நான் இருக்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் அது மதன் கார்க்கி போட்ட ட்வீட் தான் என்றாலும், அவர் கடந்த கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போட்ட டீவீட்டை எடிட் செய்து சமூக வலைதளத்தில் உலாவவிட்டுள்ளனர் என்று பின்னர் தான் தெரியவந்தது.

Mathan-karki-tweet

அதே போல மதன் கார்க்கி தரப்பில் இருந்தும் அது பழைய ட்வீட் தான் என்றும் உறுதி செய்துள்ளனர். மேலும், வைரமுத்து சின்மயி சர்ச்சை குறித்து வைரமுத்துவின் இளைய மகன் கபிலனிடம் கேட்கப்பட்ட போது, இந்த விவகாரத்துல அப்பாவே ட்விட்டர்ல பதில் சொல்லிட்டார். `சின்மயிக்கு ஆதரவாக மதன் கார்க்கி பதிவிட்டார்’னு சொல்ற ட்வீட்டை நல்லா கவனிச்சுப் பாருங்க. அது 2012-ல் சின்மயிக்கு நிகழ்ந்த ஒரு பிரச்னையின்போது பதியப்பட்டது என்று கூறியுள்ளார்.