பாலாஜி முன் ஏன் உடையை மாற்றினேன் ? வைஷ்ணவி விளக்கம்

0
568
rj-vash
- Advertisement -

நபர் என்ற பெயரை பெற்றிருந்தாலும். ஒரு டாஸ்கில் பாலாஜி முன்பு உடை மாற்றியது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி பேட்டி ஒன்றில் எதற்காக பாலாஜி முன் உடை மாற்றினேன் என்று விளக்கமளித்துள்ளார்.

-விளம்பரம்-

Vaishnavi

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவி இருந்த போது ‘உன்னை போல் ஒருவன்’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர் கதாபாத்திரமாக மாறி, அவர்களை போன்றே நடை, உடை, பாவனை அனைத்தையும் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

இந்த டாஸ்கில் ரெட் டீம், ப்ளூ டீம் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சில தனிப்பட்ட டாஸ்க்குகளும் கொடுப்பட்டது. அப்போது ப்ளூ டீமிருக்கு, ரெட் டீமில் இருக்கும் யாராவது ஒருவரை வெறுப்படைய செய்ய வேண்டும் என்ற டாஸ்க்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கின் போது பாலாஜி கதாபாத்திரத்தில் இருந்த வைஷ்ணவி டாஸ்க்கிற்காக பாலாஜி முன்பு உடை மாற்றியது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த வைஷ்ணவி, டாஸ்க்கென்று வந்து விட்டால் அனைவரும் எந்த அளவிற்கு செல்வார்கள் என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள், நான் ஒன்னும் பெரிசா ஒன்னும் பண்ணிடல அந்த டாஸ்கில் எதிரணியில் உள்ள யாரையாவது சங்கடபட வைக்க வேண்டும் என்பது தான் டாஸ்க். அந்த டாஸ்கில் பாலாஜிகிட்ட மட்டும் தான் பண்ண முடியும் வேற யார்கிட்டயும் பண்ண முடியாது என்ற நிலை இருந்தது .எனவே, பாலாஜியிடம் பண்ணலாம்னு முடிவு பண்ணிணோம்.

Vaishnavi

நான் பாலாஜி முன்பு உடை கழட்டி போது உள்ளே அணிந்திருந்த அந்த உள்ளாடை நகரத்தில் எல்லோரும் அணியும் ஒரு ஆடை தான், யாஷிகா, ஐஸ்வர்யா கூட அந்த ஆடையை பல முறை அணிந்துள்ளனர். அது உள்ள தான் இருக்கு கழட்டபோறது என்னவோ மேல இருக்க ஷர்ட்டை மட்டும் தான். ஒரு படத்துல ஒரு கேரக்டருக்கு ஒரு ரோல் இருந்துச்சின்னா, அதுக்கு ஏற்ற மாதிரி மாறனும்.

ஒரு வேலை பாலாஜி மீது ஷிர்ட்ல சாம்பார் கொட்னா அவர் பாத்ரூம் போய் ட்ரெஸ் மாத்த மாட்டாரு. நான் பாலாஜி கேரக்டர ஸ்மார்ட்டா பயன்படுத்தி விளையாடினேன். அதுமட்டுமில்லாம நான் செஞ்சதுல அநாகரீகமா எதுவும் நான் பண்ணல. நான் உள்ள சாதாரணமாக அணியும் ஆடையை தான் அணிந்திருந்தேன். நான் ஆபாசமா ஏதும் பண்ணல, அது ஒரு சிறந்த யுத்தி, ஆனா இது ஏன் இந்த அளவுக்கு பெருசா ஆச்சின்னு தெரியல. என்று தான் செய்த தவறை நியாயபடுத்தியே பேசி இருந்தார்.

Advertisement