வைதேகி காத்திருந்தாள் சீரியல் நிறுத்தப்பட்டத்தை தொடர்ந்து அந்த சீரியலில் நாயகியாக நடித்த சரண்யா பதிவு ஒன்றை போட்டுள்ளார். சின்னத்திரையில் உள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவராக சரண்யா திகழ்ந்து வருகிறார். இளசுகள் மனதை கொள்ளை அடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா கலைஞர் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்தார். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால், அந்த தொலைக்காட்சியில் இரண்டு மாதங்கள் மட்டுமே தான் இருந்தார். பின்னர் ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற பல தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார்.
மேலும், இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்து உள்ளார். இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். பின்னர் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த நெஞ்சம் மறைப்பதில் சீரியலில் நடித்து இருந்தார். பின் சன் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட ரன் என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், சரண்யா இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.
நிறுத்தப்பட்ட ஆயுத எழுத்து :
அதன் பின்னர் இவர் ஆயுத எழுத்து சீரியலில் கமிட் ஆனார். இவருக்கு முன்பாக அந்த தொடரில் ஸ்ரீத்து கிருஷ்ணன் தான் நடித்து வந்தார். அவர் விலகிய பின்னர் தான் இவர் இந்த தொடரில் கமிட் ஆனார். ஆனால், இந்த சீரியலும் திடீரென்று நிறுத்தப்பட்டது. பின்னர் கிட்டத்தட்ட இவர் ஓராண்டுகள் எந்த சீரியலிலும் நடிக்காமல் தான் இருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் சமீபத்தில் விஜய் டிவியில் துவங்கப்பட்ட ‘வைதேகி காத்திருந்தாள்’ தொடரில் மீண்டும் நடிக்க வந்தார்.
இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக பிரஜன் நடித்து வந்த நிலையில் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவே சீரியலில் இருந்து விலகினார். பின் அவருக்கு பதில் முன்னா நடிக்க வந்தார். 50 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் சமீபத்தில் திடீரென்று நிறுத்தப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டது குறித்து சரண்யா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
சரண்யா போட்ட பதிவு :
‘இந்த கஷ்டமான நேரத்தில் அமைதியாக இருக்க விரும்புகிறேன். கடினமான காலத்தில் எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு எனது நன்றிகள். இப்போது மிகவும் கஷ்டமான காலத்தை சந்தித்து வருகிறேன். உழைப்பை உதாசீனப்படுத்தும் போது தான் மிகவும் வலிக்கிறது. கூடுதல் பலத்துடன் விரைவில் மீண்டு வருவேன். எதுவும் என்னை சிதைக்க முடியாது’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் இது குறித்து முன்னாவும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ‘நடப்பது எல்லாம் நன்மைக்கே’ என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இவர்களின் பதிவிற்கு பலர் ஆறுதலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இயக்குனரின் பதிவு :
ஏற்கனவே இந்த சீரியலின் இயக்குனர் இந்த சீரியல் நிறுத்தப்பட்ட பின்னர் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘வாழ்க்கைப் பயணத்துல சுவாரஸ்யமான விஷயமே பல திருப்பங்கள் தான். இன்னும் கூடுதலான பாஸிட்டிவ் எனர்ஜியோட அடுத்த எதிர்பாராத சுவாரஸ்யத்தை தேடி பயணிக்கிறேன். எனது பயணத்தில் எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து வரும் தங்களுக்கும், என்னுடன் பயணித்த,… பயணிக்கும் அனைவருக்கும் என்றென்றும் நன்றிகள் பல’ என்று உருக்கமுடன் பதிவிட்டு இருக்கிறார்.