பட விழாவில் காதலிக்கு புரபோஸ் செய்த வலிமை வில்லன் – காதலி என்ன செய்தார் பாருங்க. வைரல் புகைப்படம்.

0
332
Karthikeya
- Advertisement -

தன் படம் ப்ரமோஷன் விழாவில் தன்னுடைய காதலிக்கு புரபோஸ் செய்த நடிகரின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தல அஜித். இவருடைய படங்களை பார்ப்பதற்கு திரையரங்களில் ரசிகர்களின் கூட்டம் அலை மோதும். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் நேர்கொண்டபார்வை, விசுவாசம் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது அஜித் அவர்கள் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Valimai actor Karthikeya's cute proposal and wedding date! | Tamil Movie  News - Times of India

மேலும் தல அஜித்தின் வலிமை படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடித்திருக்கிறார். இவர் ’ராஜா விக்ரமாதித்தன்’ என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் ’ராஜா விக்ரமாதித்தன்’ என்ற படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் நடந்து இருந்தது. அந்த பட புரமோஷனில் கார்த்திகேயா அவர்கள் முழங்காலிட்டு மலர் கொடுத்து தன்னுடைய காதலிக்கு புரபோஸ் செய்திருந்தார்.

இதையும் பாருங்க : 3 வயசு தான் வித்யாசம். ஆனால், ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்துள்ள பிரபலம் – நோண்டி எடுத்த நெட்டிசன்கள்.

- Advertisement -

தற்போது இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி நடிகர் கார்த்திகேயாவுக்கும், லோகிதா ரெட்டி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து இருந்தது. நடிகர் கார்த்திகேயா அவர்கள் 2010 ஆம் ஆண்டில் இருந்து லோகிதாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

Valimai actor Kartikeya proposes to fiance Lohitha at Raja Vikramarka  event. See pics - Movies News

அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்து காதலாக மாறி தற்போது இரு குடும்பத்தாரின் சம்மதத்தோடு நவம்பர் 21ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இவர்களுடைய திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. கார்த்திகேயா அவர்கள் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement