சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.
இதற்காக அவர்கள் இவர் ஒரு படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்றும் கூறினர். இப்படி ஒரு நிலையில் இவர் ‘ஆன்டி இந்தியன்’ படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகும் முன்னரே பல பிரச்சனைகளை சந்தித்து. இருப்பினும் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆன்டி இந்தியன் படத்திற்கு பின் இவர் விமர்சனம் செய்வாரா என்ற கேள்வி எழுந்தது.
ப்ளூ சட்டையின் வலிமை விமர்சனம் :
ஆனால், படம் எடுக்க சென்றாலும் மீண்டும் தனது விமர்சன பணியை செய்து வருகிறார் மாறன். இப்படி ஒரு நிலையில் நேற்று வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்தை விமர்சனம் செய்து இருக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது. மேலும், அஜித் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து அஜித் படம் வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
இதையும் பாருங்க : விஜய் ரசிகரா காமிச்சிக்கிட்ட சிபிராஜ், சாந்தனு எல்லாம் Flop ஆகிட்டாங்க, அந்த லிஸ்ட்ல இப்போ நீங்க- கேலி செய்தவருக்கு மாஸ்டர் மகேந்திரன் கொடுத்த பதிலடி.
சுமாரான விமர்சனம் பெரும் வலிமை :
மேலும், இந்த படம் ரசிகர்களின் 3 வருட காத்திருப்பை ஓரளவிற்கு பூர்த்தி செய்து இருந்தாலும் ஜென்ரல் ஆடியன்ஸை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை. இந்த படம் வெளியானதை தொடர்ந்து பாண்டா பிரஷாந்த், சினிமா பையன் அபிஷேக் என்று பலர் விமர்சனம் செய்தனர். மேலும், பெரும்பாலான விமர்சகர்கள் இந்த படத்திற்கு சுமார் என்ற விமர்சனத்தையே கொடுத்து இருக்கின்றனர்.
அஜித்தை கேலி செய்த மாறன் :
என்னதான் பலர் விமர்சனம் செய்தாலும் இணையதள வாசிகள் அனைவரும் ப்ளூ சட்டையின் விமர்சனத்திற்காக தான் காத்துகொண்டு இருந்தனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் வலிமை படத்தை விமர்சனம் செய்து இருக்கிறார். அதில், படத்தை கழுவி ஊற்றியுள்ளதோடு மட்டுமல்லாமல், அஜித்திற்கு மூஞ்சில் தொப்பை இருக்கு, படத்தை தயாரித்த போனி கபூர் தான் ஒரு சேட் என்றால் அஜித் பஜன் லால் சேட்டு மாதிரி கொழுக் முழுக்னு இருக்கார், டான்ஸ் ஆடவே கஷ்டப்படுறார் என்று அஜித்தையும் கேலி செய்துள்ளார்.