மத்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்தா அவங்க வாழ்க்கையும் மாறுமில்ல சார்னு சொன்னேன் – அதுக்கு அவர் சொன்ன பதில்.

0
6082
vinoth
- Advertisement -

கோலிவுட் வட்டாரத்தில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். அந்த அளவுக்கு இவருடைய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. தற்போது அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

-விளம்பரம்-

இந்நிலையில் தல அஜித் அவர்கள் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் படம் பண்ணுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தல அஜித் அவர்கள் இயக்குனர் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம்,விசுவாசம் என தொடர்ந்து நான்கு படங்களில் நடித்திருக்கிறார். பிறகு இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தல அஜித் அவர்கள் மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்திற்கு பிறகும் அஜித் அவர்கள் வினோத் இயக்கும் புது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : ஷார்ட் பிலிமில் லிப் லாக் காட்சியில் நடித்துள்ள அக்ஷரா – வைரலாகும் வீடியோ இதோ.

- Advertisement -

கிட்டத்தட்ட அஜித் நடிப்பில் வெளிவந்த 6 படங்களில் இரண்டு இயக்குனருக்கு மட்டுமே அஜித் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இது குறித்து வினோத் அவர்கள் அஜித்திடம் கேட்டு உள்ளார். அப்போது அஜித் கூறியதை சமீபத்தில் பேட்டி ஒன்றில் வினோத் கூறியுள்ளார். அதில் ஒரு கூறி இருப்பது, நேர்கொண்ட பார்வை படம் ஒரு கமர்சியல் படம் இல்லை என்பதால் நீங்கள் எனக்கு இன்னொரு பட வாய்ப்பு கொடுத்தீர்கள். அந்த படம் எனக்கு மிகப் பெரிய அளவில் மாற்றம் வந்திருக்கு. அதே மாதிரி நிறைய இயக்குனர்களுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் அவர்களுடைய வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் வரும் என்று நான் அஜித் சாரிடம் கேட்டேன்.

அதற்கு அஜித் சார் கூறியது எனக்கு கம்பார்ட்டா வேலை செய்வது தான் ரொம்ப முக்கியம். யாரோட எனக்கு கம்பார்ட்டா இருக்கு என்று பீல் பண்ணறேனோ அவங்களோட தான் தொடர்ந்து வேலை செய்வேன் என்று சொல்லியிருந்தார் என்று வினோத் கூறினார். மேலும், அஜித் தான் நடித்த 7 படங்களில் இரண்டு இயக்குனர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்ததற்கு காரணம் இது தான் என்று தற்போது தெரியவந்துள்ளது. அதோடு அஜித்தின் அடுத்த படத்தை வினோத் தான் இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement