‘வலிமை’ பட வில்லன் நடிகருக்கு திருமணம் – கேரள பெண்ணை கைப்பிடித்தார். இதோ புகைப்படங்கள்.

0
600
valimai
- Advertisement -

அஜித்தின் வலிமை பட நடிகருக்கு திருமணமாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசானது. இந்த படத்தை வினோத் இயக்கி இருக்கிறார் மற்றும் போனிகபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது படத்தின் மீதி கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஸ்டண்ட் காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதோடு படத்தின் கதாநாயகி செய்யும் சண்டை காட்சிகள் எல்லாம் அற்புதமாக உள்ளது.

- Advertisement -

வலிமை படம் பற்றிய தகவல்:

இந்த படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் வலிமை திரைப்படம் தமிழகத்தில் இதுவரை 900க்கும் மேல் திரையரங்களில் வெளியாகி இருந்தது. அதோடு தமிழ் சினிமா வரலாற்றில் 100 வருட சாதனையை வலிமை செய்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும், வலிமை படம் வெளியாகி வசூலை வாரி குவித்தது அனைவருக்கும் தெரிந்ததே.

அஜித் நடிக்கும் படங்கள்:

படம் வெளியாகி 5 நாட்களில் 100 கோடி வெளியாகி வசூல் செய்ததாகவும், 12 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. அதுமட்டுமில்லாமல் தற்போது வலிமை படம் 300 கோடியை நோக்கி வசூல் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். ‘ஏகே 61’ படத்தின் வேலைகள் எல்லாம் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

வலிமை பட நடிகரின் திருமணம்:

அதோடு அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது. இதனால் ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளார்கள். இந்த நிலையில் வலிமை திரைப்படத்தில் நடித்த நடிகருக்கு திருமணமாகி உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. வலிமை படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயா. இவருடைய அடியாட்களில் ஒருவராக நடித்தவர் துருவன். இவருக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கும் கேரளாவில் உள்ள பாலக்காடு என்ற பகுதியில் சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

நடிகர் துருவன் நடித்த படங்கள்:

இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், இந்த திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை நடிகர் துருவன் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் துருவன்- அஞ்சலி தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நடிகர் துருவன் தற்போது பிரித்விராஜ் நடிப்பில் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ள ஜன கண மன என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் இன்னும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement