அஜித்தின் ஸ்ட்ரிக்ட் உத்தரவால் ‘வலிமை’ படத்தின் மொத்த திட்டமும் போச்சா? விவரம் இதோ.

0
1348
valimai
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் பணிகள் படு மும்மரமாக நடைபெற்று வந்தது. மேலும், இந்த படம் ஏப்ரிலில் வெளியாவதாக இருந்த நிலையில் பின்னர் தீபாவளிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது அஜித்தின் அறிவிப்பால் இந்த படம் 2021க்கும் வெளியாகும் நிலை ஏற்பட்டு உள்ளதாம். கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பில் அனைத்தும் நிறுத்தப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-
valimai

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை மட்டும் தொடர்ந்து கொள்ளலாம் என்று அரசு அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து சினிமா துறை கொஞ்சம் நிம்மதி அடைந்தது. இருப்பினும் படப்பிடிப்புகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டாலும் நடிகர் அஜித், கொரோனா பிரச்சனை முழுதாக முடியும் வரை படப்பிடிப்பு பணிகளை தொடர கூடாது என்று ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

வலிமை படக்குழுவில் பணி புரியும் சிலர் கூறியதாக பிரபல ஆன் லைன் மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதில், அஜித்தின் முதல் கவலை ஒவ்வொரு நடிகர்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் பாதுகாப்பு தான். இதனால் அஜித் ‘வலிமை’ படத்தின் இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரை தொடர்பு கொண்டு ‘எல்லாம் இயல்பு நிலைக்கு திருப்பும் வரை படத்தின் பணிகளை தொடர வேண்டாம்’ என்று கூற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை போனி கபூரே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரத்திற்கு முன்னர் தான் போனி கபூர் இந்த படத்தின் அப்டேட் குறித்து கேட்டு வந்த ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘தற்போது இருக்கும் பிரச்னையை முதலில் பார்ப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார். எனவே, அஜித்தின் வேண்டுகோளை போனி கபூர் ஏற்பார் என்றும் நம்ப படுகிறது.

-விளம்பரம்-
Advertisement