வல்லரசுகளையே நடுங்க வைத்த கேங், வலிமை படத்தில் வரும் Satan Slavesன் உண்மை பின்னனி பற்றி தெரியுமா ?

0
1170
- Advertisement -

நீண்ட நாள்கள் எதிர்பார்த்து காத்து இருந்த வலிமை படம் இன்று ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். ஒட்டுமொத்தச் இந்திய சினிமாவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வலிமை படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் வெளியான போது சாத்தான் ஸ்லேவ் ரைடர்கள் பற்றி சொல்லப்பட்டு இருக்கும்.

-விளம்பரம்-

உடனே சாத்தான் ஸ்லேவ் ரைடர்கள் யார்? என்ற கேள்வி சினிமா ரசிகர்களிடையே பல சர்ச்சைகள் எழுந்து சாத்தான் ஸ்லேவ் ரைடர்கள் குறித்து பலரும் தீவிரமாக சோசியல் மீடியாவில் தேடத் தொடங்கி இருந்தார்கள். அப்படி வலிமை படத்தில் காட்டப்பட்ட சாத்தான் ஸ்லேவ் ரைடர்கள் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். நீங்கள் கடைத்தெடுத்த விஷம் நாங்கள். சாத்தானின் அடிமைகள் நாங்கள். இருள் மலைதான் எங்கள் உலகு. அதில் அத்துமீறி யாராவது கால் வைத்தால் என்று வரிகள் வரும் போது அதற்கான பிஜிஎம், பைக் ஸ்டன்ட் எல்லாம் வேற லெவலில் இருக்கும். பொதுவாகவே வினோத் அவர்கள் பெட்டி கிரைம் செய்திகளை வைத்து சதுரங்க வேட்டை எடுத்து இருந்தார்.

- Advertisement -

வலிமை படம் உருவான விதம்:

அதேபோல் பவாரியா கொள்ளை கூட்டத்தை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று எடுத்தார். அப்படி ஒரு கிரைம் கேங்கை பற்றிய கதைதான் இந்த வலிமை. சாத்தான் ஸ்லேவ் என்பது சர்வதேச அளவில் இருக்கும் சாத்தான் ஸ்லேவ் பைக் ரைடர்களை குறிப்பிட்டு தான் வலிமை பற்றி சொல்லப்படுகிறது. அதாவது சாத்தான்களின் அடிமை என்ற பெயரில் ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து ஸ்காட்லாந்து என்று பல நாடுகளில் இயங்கி வரும் பைக் ரைடர்களை பின்புலமாகக் கொண்ட கதை தான் வலிமை. பைக் ரைடர்கள் என்றால் பைக்கில் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு டிரிப் போகும் வகை கிடையாது. இவர்கள் ஹிட்லரின் அடிப்பொடிகளாக பார்ப்பவர்கள். பல கேஸ்களில் தேடப்பட்டு வந்த பைக் கேங். இங்கிலாந்தில் 1967ல் சாத்தான் ஸ்லேவ் எம்சி என்ற பைக்கர் கேங் உருவாக்கப்பட்டது.

சாத்தான் ஸ்லேவ் பைக் ரைடர்கள்:

கருப்பு ஜாக்கெட்டில் பின்னாடி எலும்பு கூடு படம் போட்டு, சாத்தான் ஸ்லேவ் என்று எழுதி இருப்பது தான் இவர்களின் அடையாளம். ஹார்லி டேவிட்சன் வகை பைக்குகள், நீண்ட ஹேண்டில் பார் கொண்ட நீளமான பைக்குகள் ஆகியவற்றை தான் இந்த கேங் பயன்படுத்தியது. தொடக்கத்தில் ஒரு கேங் தான் இருந்தது. அதன் பின் அதே பெயரில் பல நாடுகளில் பல கேங்குகள் உருவாக்கப்பட்டது. முக்கியமாக வல்லரசு நாடுகளான இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த கேங் அதிகமாக உருவாக்கப்பட்டது. இதில் சில குழுக்கள் முழுக்க முழுக்க பைக் ரைட்டுகளை மட்டுமே செய்கிறது. ஆனால், பல குழுக்கள் கொலை, கொள்ளை, வன்புணர்வு என்று பல குற்றங்களை செய்து பல கேஸ்களில் சிக்கி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சாத்தான் ஸ்லேவ் பைக் ரைடர்கள் இருக்கும் இடங்கள்:

முக்கியமாக நியூயார்க், லண்டனில் பல சாத்தான் ஸ்லேவ் குழுக்கள் பைக்குகளை வைத்து கொள்ளையில் ஈடுபடுவது, குழுவாக சேர்ந்து கொலை செய்வது, பெண்களை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்வது என பல கேஸ்களில் சிக்கி இருக்கிறார்கள். இதில் சில பிரபல சாத்தான் ஸ்லேவ் ரைடர்கள் இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள். மேலும், துப்பாக்கிகளை அதிக அளவில் வைத்துக் கொண்டு பைக்கில் சுற்றுவது, ஹோட்டல்களில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே குற்றச் செயல்களில் ஈடுபடுவது, நெடுஞ்சாலையில் தனியாக செல்லும் காரை வழிமறித்து குழுவாக சேர்ந்து கொள்ளை குற்றங்களை செய்வது, எதிரிகளுடன் மோதி கொலை செய்வது என்று பல குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இது அதிகம் நியூயார்க், லண்டன் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நிகழ்கின்றது.

சாத்தான் ஸ்லேவ் பைக் ரைடர்கள் செய்த வேலை:

பல முக்கிய ரைடர்கள் 10,20 வருடங்களுக்கு முன்பாக சிறையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் சமீப காலமாக போதைப்பொருள் கலாசாரம் இந்த கேங்கில் உள்ளது. போதை பொருள் விற்று இந்த குழுக்கள் பல இடங்களில் கைதாகி இருக்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இவர்களை ஒடுக்க தனியாக போலீஸ் படைகளை, சிறப்புப் படைகளை அமைத்தும் இருக்கிறது. இப்போது பல குழுக்கள் அடங்கி விட்டாலும் இன்றும் சில மோசமான கொலைகார குழுக்கள் ஆக்டிவாக தான் இருக்கிறது. இந்த குழுக்கள் பல ஹிட்லரின் கருத்தைப் பின்பற்றக்கூடிய நாசிகள் என்று கூறப்படுகிறது. உடலில் நாசி சிம்பிளை போட்டுக்கொள்வது, நாசிகளின் கையில் உயர்ந்தும் சல்யூட் முறையை கடைபிடிப்பது என்று மிக மிக மோசமான இவர்கள் வலம் வருகிறார்கள்.

சாத்தான் ஸ்லேவ் பைக் ரைடர்கள் பற்றிய வலிமை:

மேலும், ஜார்ஜ் ரிட்சி போன்ற சாத்தான் ஸ்லேவ் ரைடர் குழுவின் தலைவர்களை பல வருடமாக போலீசார் தேடி கைது செய்திருக்கின்றனர். ஜார்ஜ் என்பவர் பிரபல சாத்தான் ஸ்லேவ் ரைடர் குழு ஒன்றின் தலைவர் ஆவார். இவர் குழந்தைகளை வன்புணர்வு செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அதே போன்று பல நாடுகளிலும் இதே பெயரிலும் அல்லது நாட்டாரியஸ் என்பது போன்ற வேறு பெயரிலும் இந்த குழுக்கள் இயங்கி வருகிறது. இதில் சில குழுக்கள் சாதாரணமாக பைக் ரைடர்களாக மட்டுமே வலம் வருகிறார்கள். பலர் சர்வதேச நாடுகள் தேடும் கிரிமினல்கள் ஆக உள்ளார்கள். இதில் ஒரு கேங்கை மையமாக வைத்தே வலிமை படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. டார்க் வெப், பைக் ரைடர்ஸ் செய்த கிரைமைகளை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Advertisement