நொறுங்கிய சொந்த பைக், அடுத்த நாள் ஷூட்டிங் நிற்க கூடாது என்று அஜித் செய்துள்ள செயல் – வலிமை ஸ்டண்ட் மாஸ்டர்

0
560
valimai
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் புதிய அப்டேட் வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் தற்போது வலிமை படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தின் பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில் வலிமை படத்தின் அப்டேட் ஏதாவது கிடைக்காதா? என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் சமீபகாலமாகவே அடுத்தடுத்து பல அப்டேட்களை படக்குழுவினர் அள்ளி வீசி வருகின்றனர்.

-விளம்பரம்-
வலிமை

மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்த நிலையில் இந்த படத்தின் Making வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. வலிமை படத்தில் நடிகர் அஜித் குமார் பைக் வீலிங் செய்யும் போது தவறி விழுந்த காட்சியும் அந்த வீடியோவில் இருக்கின்றது. இது குறித்து இந்த படத்திற்கு ஸ்டண்ட் கோரியோகிராஃபர் திலிப் சுப்புராயன் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அஜித் சார் பைக் சேஸ் செய்து வரதை எடுக்கலாம் என்று பிளான் செய்தோம்.

- Advertisement -

நானும் நீரவ் ஷா சாரும் எதிரில் இருக்கிற ரோட்டில் கேமரா வைத்துக் கொண்டிருந்தோம். அன்றைக்கு தான் அந்த காட்சியோடு கடைசி ஷாட். அப்போது அஜித் சார் 110 கிலோமீட்டர் வேகத்தில் வந்தார். அப்போது ரோட்டில் இருந்த ஒரு சின்ன கல் அவரை தவறி கீழே விழ வைத்துவிட்டது. அவர் விழுந்த உடனே எங்க எல்லோருமே பயங்கர பதட்டமும், பயமும் வந்துவிட்டது. உடனே வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக ஓடிப்போய் நாங்கள் தூக்க போனோம். ஆனால், அதற்கு முன்னாடி அவர் எழுந்து விட்டார். அவருக்கு என்னாச்சு? ஏதாச்சு? என்று எல்லாரும் பயந்து கேட்டோம்.

'வலிமை'

ஆனால், அவர் பைக்குக்கு என்ன ஆச்சு? போய் பாருங்கள். நாளைக்கு சேஸ் சீன் இருக்கு என்று சொன்னார். பின் நாங்கள் அதை விடுங்க சார் பார்த்துக்கலாம் என்று சொன்னோம். இருந்தும் அவர் பைக்கை பற்றியும், நாளைக்கு எடுக்கும் சூட்டிங் பற்றியுமே யோசித்தார். அது அவருடைய பைக் தான். பைக்குக்கு செம அடி. கொஞ்சம் அங்கங்க உடைந்துவிட்டது. மறுநாள் ஷூட்டிங் அந்த பைக் இல்லை என்றால் காட்சி எடுப்பது கஷ்டம். அதனால் ஷூட்டிங் கேன்சல் பண்ணலாம் என்று யோசித்து இருந்தோம்.

-விளம்பரம்-

அப்புறம் அஜித் சார் அந்த பைக் கம்பெனிக்கு போன் பண்ணி இந்த மாடல் வண்டி இந்தியாவில் யார் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டு பெங்களூரில் ஒருத்தர்கிட்ட இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அவரிடம் பேசி பைக்கை வாங்கினார். மேலும், அவருக்கு என்ன ஆனது? என்று கவலைப்படாமல் அடுத்த நாளே சூட்டுக்கு எனர்ஜியாக வந்தார். இப்ப இந்த வீடியோவில் வந்திருக்க ஆக்சன் சீக்வென்ஸ் எல்லாம் சின்ன சாம்பிள் தான். படத்தில் வேற லெவல்ல வந்து இருக்கு என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் கூறியிருக்கும் தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement