அஜித்தால் டயட்டை விட்டுள்ள வலிமை பட வில்லன் கார்த்திகேயா – அவரே சொன்ன காரணம் இதோ.

0
538
karthikeya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தல அஜித். இவருடைய படங்களை பார்ப்பதற்கு திரையரங்களில் ரசிகர்களின் கூட்டம் அலை மோதும். அதுமட்டும் இல்லாமல் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருக்கிறது. வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் மீதி கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹீமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார்.

- Advertisement -

கார்த்திகேயா திரைப்பயணம்:

படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். வலிமை படம் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து இருக்கிறது என்று படத்தின் தயாரிப்பளார் கடந்த வாரம் பதிவு போட்டு இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, வலிமை படத்தில் அஜித்திற்கு பிறகு மக்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்ட கதாபாத்திரம் என்றால் வில்லன் தான். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயன் நடித்திருக்கிறார். இவர் தெலுங்கு மொழியில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர்.

கார்த்திகேயா அளித்த பேட்டி:

தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட ’ராஜா விக்ரமாதித்தன்’ என்ற படத்தில் இவர் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்தது. இதற்கு அஜித் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வலிமை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கார்த்திகேயாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் கார்த்திகேயா வலிமை படம் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பேசியிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, அஜித் சார் லட்டு போல் இனிப்பானவர். வினோத் சார் சாக்லேட் போல் இனிப்பானவர். அஜித் சாருடன் நடிக்கும் போது அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுப்பார்.

-விளம்பரம்-

அஜித் உடைய சினிமா அனுபவம்:

அவர் என்றைக்கும் அவரைப் பற்றி மட்டுமே யோசித்தது கிடையாது. இதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அஜித் சார் நிறைய அறுவை சிகிச்சைகள் செய்து வந்தாலும் படத்திற்காக பல கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு ஒவ்வொரு காட்சிகளையும் 200% உழைப்பை போட்டு நடிப்பார். ரொம்ப புரோபஷனல் ஆக இருப்பார். இது என்னை அவரிடம் ஈர்த்த விஷயம். அஜித் அவர்கள் எப்போதுமே எல்லோரிடமும் சகஜமாக பேசுவார். ஒரு பிக் பிரதர் மாதிரி நடப்பார். என்கிட்ட மட்டும் இல்லை எல்லோரிடமும் அவர் இப்படி தான் நடந்து கொள்வார். எனக்கும் படத்தில் பைக் ரேசிங் இருக்கும். அஜித் சார் பைக் ரேசிங் எடுக்குறதுக்கு முன்னாடி என்னோட பைக்கை எடுத்து செக் பண்ணி பார்ப்பார். இன்ஜின், பிரேக் எல்லாம் சரியா இருக்கானு ஓட்டி பார்ப்பார்.

கடைசி நாள் ஷூட்டில் அஜித் செய்தது:

படத்தில் பைக் ரேசிங் பண்ணியிருக்கேன். ஆனால், அஜித் சார் லெவலுக்கு பண்ண முடியவில்லை. அஜித் சாருக்கு சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் அதிகம். நிறைய ஜோக் சொல்லிக்கொண்டே இருப்பார். அதுமட்டுமில்லாமல் அஜித் சார் இருந்தாலே போதும் செட்டில் எல்லோரும் கலகலப்பாக இருப்பார்கள். அவர் இல்லை என்றால் எதையோ மிஸ் பண்ணுவது போல் இருக்கும். கடைசி நாள் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு முடிந்த உடனே அஜித் சார் அனைவருக்கும் ரொம்ப சுவையான ஆந்திர ஸ்டைலில் பிரியாணி சமைத்து தந்தார். நான் எப்போதும் டயட் விஷயத்தில் கண்டிப்பாக இருப்பேன். ஆனால், அன்று அஜித் சார் பிரியாணி சாப்பிடுவதற்காக என்னுடைய டயட்டை விட்டு விட்டேன். இதுவரை நான் சாப்பிட்டதிலேயே மிகவும் சுவையான பிரியாணி அது தான். என்று கூறியிருந்தார்.

Advertisement