மீண்டும் வள்ளியின் வேலன் சீரியலில் இயக்குனர் மாற்றம் செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப் பிரபலமான ஜோடிகளாக திகழ்பவர்கள் சித்து- ஸ்ரேயா. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘திருமணம்’ என்ற சீரியல் மூலம் தான் சித்து- ஸ்ரேயா மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்கள். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள்.

அதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘ராஜா ராணி 2’ சீரியலில் சித்து நடித்திருந்தார். அதே போல் நடிகை ஸ்ரேயாவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அன்புடன் குஷி’ என்னும் சீரியலில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘ரஜினி’ என்னும் சீரியலில் ஸ்ரேயா நடித்திருந்தார்.
சித்து- ஸ்ரேயா திரைப்பயணம்:
இவர்கள் நடித்த அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘வள்ளியின் வேலன்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்கள். அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் வள்ளிக்கு ஆறுதலாக துணையாக நிற்கும் வேலனின் கதை தான் இந்த வள்ளியின் வேலன். இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

வள்ளியின் வேலன்:
மேலும், இந்த சீரியலில் ஸ்ரேயாவின் அப்பாவாக நடித்து வந்தவர் சாக்ஷி சிவா. சில மாதங்களுக்கு முன் தான் இந்த சீரியலில் இருந்து சாக்ஷி சிவா வெளியேறி இருந்தார். இவருக்கு பதிலாக தற்போது ஆடிட்டர் ஸ்ரீதர் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவர் விலகியதற்கு காரணம், இவர் ஷூட்டிங்க்கு ஒத்துழைப்பு சரியாக தருவதில்லை. இவரால் நிறைய பிரச்சனை வருகிறது என்று ஒரு சிலர் கூறியிருந்தார்கள். இன்னொரு சிலர், இவருக்கும் சீரியல் யூனிட்டுக்கும் செட் ஆகவில்லை. சீரியல் தொடங்கியதில் இருந்து இந்த பிரச்சனை இருக்கு என்று சொன்னார்கள்.

சீரியலில் நடந்த மாற்றங்கள்:
இதை அடுத்து சாக்ஷி சிவா சோசியல் மீடியாவில் விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.
இதை அடுத்து இயக்குனர் மாற்றம் நடந்தது. முதலில் இந்த சீரியலை ராஜ்குமார் என்பவர் இயக்கியிருந்தார். தற்போது அவருக்கு பதில் பிரதாப் என்பவர் இயக்கியிருக்கிறார். இதை அடுத்து சில தினங்களுக்கு முன்பு தான் சீரியலில் கதாநாயகிக்கு அம்மாவாக நடித்த வரும் நடிகைக்கு பிரச்சனை என்று ஷூட்டிங் சில மணி நிறுத்தி இருந்தார்கள். தற்போது சீரியல் இயக்குனர் பிரதாப்பை அதிரடியாக நீக்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக சீரியல் யூனிட் தரப்பில் கூறியிருந்தது, சீரியல் இயக்குனர் பிரதாப் நடிகர்களிடம் நடந்து கொள்ளும் விதமே ரொம்ப மோசமாக இருக்கிறது.

சீரியல் தரப்பில் சொன்னது:
ஹீரோ, ஹீரோயினி தவிர மத்த எல்லா நடிகர்களிடம் அவர் மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறார். ஒருமையில் பேசுகிறார். காரணமே இல்லாமல் திட்டுகிறார். அவருடைய நடவடிக்கைகள் மோசமாக போகிறது. ஒரு நடிகையுடன் சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட சர்ச்சை விவகாரம் சேனல் வரை போனது. இவராலே அந்த நடிகை தொடரிலிருந்து வெளியே போனார். எவ்வளவு நாள் தான் ஒருத்தர் தொடர்ந்து அக்கிரமங்களை செய்து கொண்டே இருக்க முடியும். இப்ப இவருக்கு எதிராக கர்மா திரும்பி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.






